நிரம்பி வழியும் அணை, திறக்க மக்கள் எதிர்ப்பு
கரூர்:
மேட்டூர் அணையை எப்போது திறப்பார்கள் என காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் பெருத்த ஆவலுடன்காத்துக் கொண்டிருக்கையில், தண்ணீர் நிரம்பி வழியும் ஒரு அணையைத் திறக்கவே கூடாது என்று மக்கள்கோரிக்கை வைக்கும் விநோதமான அவலம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் ஒரத்துப்பாளையத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. ஈரோடு, கரூர்மாவட்டத்தைச் சேர்ந்த 20,000 ஏக்கர் பாசன நிலங்களின் நீர்ப்பாசன வசதிக்காகவே இந்த அணை கட்டப்பட்டது.
ஆனால் ஈரோடு, கரூர் மாவட்ட சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த அணையில் சேர்ந்துஅணையே மாசுபட்டு விட்டது. இதனால் இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீரை எதற்குமே பயன்படுத்த முடியாதநிலை நிலவுகிறது.
இந்தச் சூழ்நிலையில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக நொய்யலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இந்தத் தண்ணீர் ஒரத்துப்பாளையம் அணைக்கு செல்ல விடாமல் தடுக்க அதிகாரிகள் கடும் முயற்சியைமேற்கொண்டனர். ஆனாலும் அதையும் மீறி ஏராளமான தண்ணீர் அணைக்குச் சென்று அணை நிரம்பி விட்டது.
ஆனால் அந்தத் தண்ணீரைத் திறந்து விட்டால், பாசன நிலங்கள் பாழாகி விடும் என்பதால், என்ன ஆனாலும்அணையைத் திறக்கக் கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணையைத் திறந்து விட அரசுமுயற்சித்தால், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி பெரும் போராட்டம் நடத்துவோம் என்றும்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடல் போல தண்ணீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத அவல நிலையில் ஒரத்துப்பாளையம் அணைப் பகுதிமக்கள் உள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications