சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை :
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தக்குமார் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும்சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணை வழங்கப்பட்டிருந்தது. இந்ததண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் .அந்த மனுவில் தனது தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் , ஜாமீன் வழங்க வேண்டும் என்றும்கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம் , ராஜகோபால் உள்ளிட்ட 6 பேருக்கு நிபந்தனைஜாமீன் வழங்கினார். மேலும் பூந்தமல்லி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார் .












Click it and Unblock the Notifications