எல்லாம் "ஓவர்"; குட்டிச் சாமியார் "ரிலாக்ஸ்"
சேலம்:
பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விட்டன. இப்போது நான் நம்மதியாக இருக்கிறேன் என்று சர்ச்சைக்குரியசேலம் குட்டிச் சாமியார் ஸ்ரீதர பரணீதர சுவாமிகள் கூறியுள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தையே ஒரு கலக்கு கலக்கியவர் சேலம் குட்டிச் சாமியார். பெற்றோர் இவரைக் கடத்தமுயன்றதாக வெளியான தகவல், அதைத் தொடர்ந்து மான் தோலில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கியது,நம்பர் பிளேட் இல்லாத ஜீப்பில் சென்றது என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினார் குட்டிச் சாமியார்.
இந் நிலையில் திடீரென அவர் தலைமறைவானார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில்மீண்டும் சேலம் வந்தார் குட்டிச்சாமியார். செய்தியாளர்களை அழைத்துப் பேசிய அவர், நான் எங்கும்தலைமறைவாகி விடவில்லை. திருவண்ணாமலை சென்று வழிபட்டேன்.
திருச்சி, காட்டுப்பெருந்துறை, மூக்கனூர் ஆகிய ஊர்களுக்கும் சென்றேன். பகவானை வழிபடவே நான்சென்றிருந்தேன்.
ஆசிரமம் ஆரம்பிப்பது குறித்து முடிவெடுத்துள்ளோம். ஆனால் இதுவரை யார் மூலமாகவும் நான் பணம்வசூலிக்கவில்லை. அப்படி வெளியான தகவல்கள் பொய்யானவை.
எனது பெற்றோருடன் சமரசம் ஏற்பட்டு விட்டது. அவர்கள் என்னுடன் இருக்க ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால்பிரச்சினை தீர்ந்து நிம்மதியாக இருக்கிறேன். எனது ஆன்மீகப் பணி இனி இடையூறு இல்லாமல் தொடரும் என்றார்குட்டிச் சாமியார்.
சாமியாரை வழி நடத்திச் செல்ல சேலத்தைச் சேர்ந்த சில தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பிரபலங்கள்அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications