நாளை முதல்வர்கள் மாநாடு: ஜெ. புறக்கணிப்பு?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரதமர் மன்மேகான் சிங் தலைமையில் மாநில முதல்வர்களின் 2 நாள் மாநாடு நாளை டெல்லியில் தொடங்குகிறது.இதில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க மாட்டார் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள், அதிகாரங்கள் மற்றும் நிதி நிலைமை குறித்து முதல்வர்கள் மாநாட்டில்விவாதிக்கப்பட உள்ளன. மேலும், பஞ்சாயத்துகளுக்கு மத்திய அரசின் நிதியை நேரடியாக வழங்கச் செய்வதுகுறித்தும், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் ஜெயலலிதா கலந்து கொள்ள மாட்டார் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் பொன்னையன், ஓ.பன்னீர்செல்வம், அன்பழகன் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications