அறிவாலயம்: கருணாநிதிக்கு அரசு நோட்டீஸ்
சென்னை:
சென்னை அண்ணா சாலையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் அரசுநிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அக் கட்சிக்கு வீட்டு வசதித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை 10,000 சதுர அடிக்கு மேல் கட்டடம் கட்டுபவர்கள், அதில் 10 சதவீத நிலத்தைமாநகராட்சி அல்லது பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
அண்ணா அறிவாலயமோ 18,900 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், அதில் 10 சதவீத நிலத்தைமாநகராட்சியிடம் திமுக வழங்கவில்லை. இதையடுத்து இந்த விஷயத்தில் விதிவிலக்கு அளிக்கக் கோரி திமுக1988ல் அரசுக்கு விண்ணபித்தது.
இதை அரசு ஏற்றுக் கொண்டு உத்தரவு வெளியிட்டது. அதில், அறிவாலயத்தின் வட கிழக்குப் பகுதியில் உள்ளநிலத்தை காலி இடமாக வைத்து, பொது மக்கள் உபயோகத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந் நிலையில் 1998ம் ஆண்டில் (திமுக ஆட்சியில்) காலி இடத்தை வட கிழக்குப் பகுதிக்குப் பதிலாக அண்ணாசாலையை ஒட்டிய இடத்தில் விட்டுவைக்கத் தயாராக இருப்பதாகவும் அதற்கு அனுமதிக்குமாறும் திமுககோரிக்கை வைத்தது.
இதை அரசுச் செயலாளர் ஏற்றுக் கொண்டு அனுமதி தந்தார். ஆனால், இது தொடர்பாக கெஜட்டில் உத்தரவுபிறப்பிக்கப்படவில்லை.
இந் நிலையில் அந்த இடத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் பூங்காவை அமைத்தது திமுக. மேலும் 1998ம்ஆண்டில் இந்த நிலம் தொடர்பாக இரு உத்தரவுகளையும் பிறப்பித்து பிரச்சனையை அத்துடன் முடிக்க முயன்றது.
இதற்கிடையே, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், அந்தப் பிரச்சனை கிளப்பப்பட்டது. மாநகராட்சியில் இந்தவிவகாரத்தை அதிமுக அவ்வப்போது கிளப்பி வந்தது.
இந் நிலையில் தமிழக வீட்டுவசதித் துறைச் செயலாளர் லாலு ரைனாசலோ இன்று திமுக அறக்கட்டளையின்தலைவரான கருணாநிதிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள காலி இடம் தொடர்பான விவகாரத்தில் விதி மீறல் உள்ளது. அந்தஇடத்தை பூங்காவாக மாற்றினாலும், பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் 1998ம் ஆண்டில் பிறப்பிக்கட்ட அரசு உத்தரவுகளை (திமுக ஆட்சியில்) ஏன் ரத்து செய்யக் கூடாது?என்பதற்கு 7 நாட்களுக்குள் திமுக பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications