வறுமை ஒழிப்பில் தமிழகம் முன்னிலை: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் கிராமப் பகுதி குடிநீர்த் திட்டங்களுக்கு ரூ. 50 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என முதல்வர்ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் குறித்த மாநாடுதொடங்கியது. இதில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. இதையடுத்து மாநாட்டில் அவரது உரைவாசிக்கப்பட்டது. அதில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:

2001ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பருவ மழை பொய்த்துவிட்டதால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறோம்.நாட்டிலேயே தண்ணீர் பிரச்சனை மிக அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம் தான்.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகம் தர மறுப்பதால் கூடுதலாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால்விவசாயத்துறையும், ஊரக வளர்ச்சியும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

தமிழக ஊரகப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. தமிழகம் போன்ற தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும்மாநிலங்கள் ஊரக வளர்ச்சியை எட்டிப் பிடிக்க வேண்டுமானால், நதிகள் இணைப்பு மிக, மிக அவசியம்.

இதில் பிரதமர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

ஊரக மக்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராம மக்கள்,ஏழைகளின் நலனைக் கருத்தில் கொண்டு தான் ரேசனில் ரூ. 3.50க்கு ஒரு கிலோ அரிசி வழங்குகிறோம்.நாட்டிலேயே இவ்வளவு குறைந்த விலையில் அரிசியை எந்த மாநில அரசும் வழங்கவில்லை.

இதற்காக ரூ. 775 கோடியை மாநில அரசு செலவிடுகிறது. 10 லட்சம் கிராமப்புற குடும்பத்தினருக்கு மாதம் ரூ. 30கிலோ இலவச அரிசியும் வழங்குகிறோம்.

தமிழகத்தில் 20.34 லட்சம் குடிசைகள் உள்ளன. இதில் பெரும்பாலானவை கிராமப் பகுதிகளில் தான் உள்ளன.ஊரகப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வீட்டு வசதித் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தவேண்டும்.

ஊரக குடிநீர் திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இந்த ஆண்டு இத் திட்டத்துக்கு மத்தியஅரசு ஒதுக்கியுள்ள ரூ. 211.50 கோடியில் தமிழகத்துக்கு ரூ. 8.89 கோடி தான் தரப்பட்டுள்ளது. இதை ரூ. 50கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும்.

வறுமை ஒழிப்பில் நட்சத்திர அந்தஸ்துடன் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு ஜெயலலிதாவின் உரையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+