சென்னைக்கு குட்பை சொல்லும் 73 வயது ரயில்!
சென்னை:
சென்னையில் கடந்த 73 ஆண்டுகளாக ஓடி வந்த மீட்டர்கேஜ் மின்சார ரயில் நாளை நள்ளிரவுடன்நிறுத்தப்படுகிறது.
சென்னை மக்கள் கூட்டத்திற்கு மிகப் பெரிய நிவாரணமாக இருந்து வருவது மின்சார ரயில்கள் தான். மின்சார ரயில்ஒரு நாள் இயங்காவிட்டாலும் நகரமே ஸ்தம்பித்துப் போய் விடும் அளவுக்கு மக்களின் வாழ்க்கையில் ஒருஅங்கமாகி விட்டது மின்சார ரயில்.
சென்னை நகரில் உள்ள மீட்டர்கேஜ் மின்சாரப் பாதை அனைத்தும் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப அகலப்பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன. தற்போது எழும்பூர்-தாம்பரம் வரையிலான மின்சாரப் பாதை மட்டுமே மீட்டர்கேஜாக உள்ளது.
கடந்த 1931ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் முதல் முறையாக மின்சார ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.மீட்டர்கேஜ் பாதையில் இந்த ரயில்கள் ஓடத் தொடங்கின.
கருகருவென புகையைக் கக்கியயபடி ஓடின இந்த ரயில்கள்.
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்பட்ட இந்த முதல் ரயிலை, மாகாண ஆளுநராக இருந்த ஜார்ஜ்ஸ்டான்லி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆரம்பத்தில் கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை மொத்தம் 12 ரயில் நிலையங்கள் இருந்தன. படிப்படியாக இது 18ரயில் நிலையங்களாக அதிகரிக்கப்பட்டன.
1965ம் ஆண்டு மின்சார ரயில் என்ஜின் பல மாற்றங்கள் கண்டது. ரயில் பெட்டிகளும் மாற்றத்திற்கு உள்ளாயின.புதுப் பொலிவுடன் மீட்டர்கேஜ் மின்சார ரயில்கள் ஓடத் தொடங்கின.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தொலைவுக்கு ஓடும் இந்த மீட்டர்கேஜ்ரயில்கள்தான் இந்தியாவின் முதல் புறநகர் மின்சார ரயில்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினசரி 3 லட்சம் பயணிகளுக்கு வசதியாக இருந்து வந்த மீட்டர்கேஜ் மின்சார ரயில்கள் நாளை நள்ளிரவு 12மணியுடன் நிரந்தரமாக நிறுத்தப்படவுள்ளன. நாளை மறுநாள் முதல் எழும்பூர்-தாம்பரம் இடையிலான மீட்டர்கேஜ்பாதைகளை அகற்றி விட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கவுள்ளது.
இதன் மூலம் 73 ஆண்டு கால வரலாறு சென்னை மக்களுக்கு குட்பை சொல்லப் போகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications