ஜோதிடர் அட்வைஸ்?: கும்பாபிஷேகங்களுக்கு தடை
சென்னை:
தமிழகம் முழுவதும் கோவில் கும்பாபிஷேகங்களை தள்ளி வைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு இந்து முன்னணி கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
தற்போது ஜெயலலிதாவுக்கு நேரம் சரியில்லை என்றும், கோவில் கும்பாபிஷேகங்கள் அவரது ஆட்சிக்கு உலை வைத்து விடும் என்றும்அவரது ஆஸ்தான ஜோதிடர் எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே முதல் கட்டமாக, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஒத்திவைக்கப்பட்டதாகக்கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதுமே கும்பாபிஷேகங்களுக்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளதுஅறநிலையத்துறை.
இது தொடர்பாக இந்து முன்னணியின் அமைப்பாளர் ராம.கோபாலன் விடுத்துள்ள அறிக்கையில்,
ஏதோ சில காரணங்களுக்காக கோவில்களில் கும்பாபிஷேகங்களை தள்ளி வைத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கும்பாபிஷேக ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்த நிலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களின்கும்பாபிஷேகங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது சரியான செயல் அல்ல.
இது பக்தர்களுக்கு மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கோவில்களை அரசின் பிடியிலிருந்து மீட்காவிட்டால்இதுபோன்ற செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.
கும்பாபிஷேகங்கள் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை அரசு வெளியிட வேண்டும். அதை தெரிந்து கொள்ளும் உரிமைமக்களுக்கு உண்டு.
முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்சினைக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராம.கோபாலன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications