மேலவளவு தலித்கள் படுகொலை நினைவு தினம்
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமத்தில் 6 தலித் சமுதாயதிதனர் படுகொலை செய்யப்பட்டதன் 7வதுஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
7 ஆண்டுகளுக்கு முன் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் மேலவளவு கிராமப் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து அவரையும், மேலும் 6 தலித்களையும் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடு ரோட்டில் வெட்டிக் கொலைசெய்தனர்.
இந்த நினைவு தினம் நேற்று மேலவளவு கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்திருமாவளவன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ப.மோகன் உள்ளிட்டோர் மேலவளவில் உள்ள தலித்களின் நினைவிடத்தில்அஞ்சலி செலுத்தினர்.
நினைவு தினத்தை முன்னிட்டு மேலமளவு கிராமம் மற்றும் மேலூரில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்தக் கொலைகளுக்குப் பின் மேலவளவு கிராம பஞசாயத்துக்கு தேர்தலே நடக்கவில்லை. தேர்தல் நடத்தப்பட்டாலும் தலித்கள்போட்டியிடவில்லை. இதனால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டே வந்தது.
ஆனால், கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஒருவர் போட்டியிட்டு வென்றார். ஆனால், உடனே தனது பதவியைராஜினாமா செய்துவிட்டார். இப்போது அவர் மேலவளவு கிராமத்துக்குள் நுழைய முடியாத சூழல் நிலவுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications