நிதி, பாதுகாப்பு கோருகிறார் சுப. இளவரசன் மனைவி
சென்னை:
தமிழர் விடுதலை இயக்கத் தலைவரான தனது கணவர் சுப. இளவரசன் கைது செய்யப்பட்டு விட்டதால் பொருளாதாரரீதியாகமிகவும் சிரமப்படுவதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறி பொருளுதவியும், பாதுகாப்பும் தருமாறு தமிழகஅரசுக்கு அவரது மனைவி மனைவி கவிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
தங்களால் சுப. இளவரசன் சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டதாக அதிரடிப்படை கூறி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.ஆனால், அவரே பல மாதங்களுக்கு முன் அதிரடிப்படையினரிடம் சரணடைந்துவிட்டதாகவும், அதை ரகசியமாக வைத்திருந்து,தாங்கள் பிடித்ததாக படையினர் கணக்கு காட்டியதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.
தற்போது சுப. இளவரசன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது மனைவி கவிதா தங்குவதற்குக் கூடவீடில்லாமல் சிரமப்படுவதாகத் தெரிகிறது.
இந் நிலையில் கவிதா தமிழக அரசுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
எனது கணவரை கர்நாடக அதிரடிப்படையினர் நாகப்பா கொலை வழக்கில் சிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். நாகப்பாவழக்கில் அவரை சேர்த்த பின் கர்நாடகத்திற்கு அழைத்துச் சென்று போலி என்கெளண்டர் மூலம் அவரைக் கொல்லதிட்டமிட்டுள்ளனர்.
எனவே தமிழக போலீஸாரே எனது கணவரை விசாரிக்க வேண்டும். வேறு மாநிலத்திற்கு எனது கணவரை அனுப்பக் கூடாது.
ஆரம்பத்தில் எனது கணவர் மீது 18 வழக்குகள்தான் தொடரப்பட்டிருந்தன. ஆனால் அவர் கைது செய்யப்பட்ட பிறகு அவர் மீது50 வழக்குகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அடிப்படையே இல்லாத பொய் வழக்குகள்.
எனது கணவருக்கும், அவரது கூட்டாளி சகாதேவனுக்கும் இடையே ஓரினச் சேர்க்கை இருப்பதாக காவல்துறையினர் கூறுவதுஅப்பட்டமான பொய்யாகும். சுப. இளவரசன் தனது இயக்கத்தைச் சேர்ந்த 78 பேருக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்தார்.
அப்படி திருமணம் செய்து கொண்டவர்களில் ஒருவர்தான் சகாதேவன். அவருக்கும் எனது கணவருக்கும் வேறு எந்தவிதமானதொடர்பும் இல்லை.
எனது கணவர் கைதுக்குப் பின் நான் மிகவம் உடைந்து போயுள்ளேன். எனது மாமனார் வீட்டில்தான் தற்போது அடைக்கலம்புகுந்துள்ளேன். பொருளாதாரரீதியாக மிகவும் சிரமப்படுகிறேன். எனது உயிருக்கும் பாதுகாப்பில்லை.
எனவே தமிழக அரசு எனக்கு வாழ்வதற்கு உரிய உதவியையும், பாதுகாப்பையும் வழங்கக் கோருகிறேன் என்று கூறியுள்ளார்கவிதா.
சுப.இளவரசனுக்கு ஓரினச் சேர்க்கை பழக்கம் இருப்பதாக கண்டுபிடித்தது சேலம் போலீஸ் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications