தமிழக வழக்கறிஞர்கள் டெல்லிக்கு படையெடுப்பு
மதுரை:
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நாளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து மதுரை கிளைக்குகூடுதல் மாவட்டங்களை ஒதுக்கக் கூடாது என்று வலியுறுத்தவுள்ளதைப் போல, மதுரை வழக்கறிஞர்களும்உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை சந்திக்கவுள்ளனர்.
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றக் கிளையைத் திறக்க சென்னை வழக்கறிஞர்கள் ஆரம்பம் முதல்எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதையும் மீறி வருகிற 24ம் தேதி கிளை திறக்கப்படவுள்ளதால், தங்களதுபோராட்டத்திற்கான காரணத்தை மாற்றிக் கொண்டுள்ளனர்.
மதுரைக்கு அருகே உள்ள திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், கரூர் போன்ற மாவட்டங்களை மதுரை கிளையுடன்சேர்க்கக் கூடாது என்று அவர்கள் கோரியுள்ளனர். இதுதொடர்பாக காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பையும்மேற்கொண்டுள்ளனர்.
சென்னை வழக்கறிஞர்களின் கோரிக்கையைக் கண்டித்து திருச்சி, கரூர், திண்டுக்கல், தஞ்சாவூர், மதுரைவழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந் நலையில் மதுரைக்கு கூடுதல் மாவட்டங்களை ஒதுக்கக் கூடாது என்று வலியுறுத்தி உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியிடம் கோரிக்கை மனு கொடுக்க சென்னை வழக்கறிஞர்கள் நாளை டெல்லி செல்லவுள்ளனர்.
இந்தப் பின்னணியில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம்மதுரையில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் டெல்லி சென்றுஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியைச் சந்திக்கவுள்ளதைப் போல மதுரை வழக்கறிஞர்களும் டெல்லி செல்ல முடிவுசெய்யப்பட்டது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திருச்சி, கரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகியவற்றை மதுரை கிளையுடன் மட்டுமேசேர்க்க வேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைவில் பெற வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியை சந்தித்து வலியுறுத்தப் போவதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.
மேலும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை சந்திக்கச் சென்ற திருச்சிவழக்கறிஞர்களைத் தாக்கிய சென்னை வழக்கறிஞர்களைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications