கும்பாபிஷேகங்கள் தள்ளிவைப்பு ஏன்? அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கும்பாபிஷேகம் நடக்க வேண்டிய கோவில்களில் திருப்பணிகள் முழுவதுமாக முடிந்த பின்னரேகும்பாபிஷேகங்கள் நடத்தப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி விளக்கம்வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதிலும், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் 83 கோவில்களில் நடத்தப்பட வேண்டியகும்பாபிஷேகங்களை தமிழக அரசு திடீரென தள்ளிவைத்துள்ளது. கும்பாபிஷேகங்கள் நடந்தால் ஜெயலலிதாஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என அவரது ஆஸ்தான ஜோதிடர் கூறியதால்தான் கும்பாபிஷேகங்கள்ஒத்திவைக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

கும்பாபிஷேகங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதற்கு பாரதீய ஜனதா, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள்,அமைப்புகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் அமைச்சர் பி.சி.ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 16 கோவில்களில்மட்டுமே கும்பாபிஷேகங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, 83 கோவில்களில் அல்ல.

கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டிய கோவில்களில் இன்னும் புணரமைப்புப் பணிகள் முழுமைஅடையவில்லை. எனவே அந்தப் பணிகளை முடித்து விட்டு அதன் பின்னர் கும்பாபிஷேகம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மயிலை கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், சிவகங்கைமாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், குணசீலம் பிரசண்ண வேங்கடேஸ்வரர் கோவில்,பஞ்செட்டி அகஸ்தீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் அடுத்த ஆண்டு மார்ச் 17ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும்.மீதமுள்ள 11 கோவில்களில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

இதற்கிடையே, அரசு தடையைப் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி ஜூலை 18ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தபிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலை நிர்வகிக்கும் கற்பக விநாயகர் நகரத்தார் அறக்கட்டளை முடிவுசெய்துள்ளது.

கண்பதி ஹோமம், கோரி பூஜை, கஜ பூஜை, பிரம்மச்சாரி பூஜை உள்ளிட்ட சம்பிரதாய பூஜைகள் வெள்ளிக்கிழமைமுதல் தொடங்கின. சனிக்கிழமை நவக்கிரஹ பூஜை நடத்தப்படும். அன்று மாலை வாஸ்து சாந்தி பூஜையும்நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை முதல் யாக சாலை பூஜை தொடங்கவுள்ளது.

கும்பாபிஷேக தேதியை முடிவு செய்த பின் அதை ஒத்திப் போடக் கூடாது, அப்படி செய்தால் அது ஆகம விதியைமீறும் செயலாகும். எனவே கும்பாபிஷேகத்தை திட்டமிட்டபடி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகரத்தார்அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதனால் பிள்ளையார்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+