விம்பிள்டன்: இறுதி சுற்றில் செரீனா- ஷரபோவா
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ் மரியா ஷரபோவாவுடன்இன்று மோதுகிறார்.
அரை இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), அமெலி மவுரெஸ்மோவை (பிரான்ஸ்) 6-7 (4-7),7-5, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.
மற்றொரு அரை இறுதியில் ரஷியாவின் மரியா ஷரபோவா முதல்நிலை வீராங்கனையான அமெரிக்காவின்லின்ட்சே டேவன்போர்ட்டுடன் மோதினார். முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் ஷரபோவா தோற்றார். ஆனால்அடுத்த 2 செட்களையும் 7-6, 6-1 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
இன்று நடைபெறும் பெண்கள் இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸை மரியா ஷரபோவா எதிர்கொள்கிறார்.ரஷியாவின் அன்னகோர்னிகாவை அடுத்து மரியா ஷரபோவாவும் தனது கவர்ச்சி உடைகள் மூலமும், அதிரடிஆட்டங்கள் மூலமும் டென்னிஸ் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார்.
கலப்பு இரட்டையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரஷியாவின் எலீனா இணை 2-6,4-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் பாப் பிரைன்-டேவன்போர்ட் இணையிடம் தோல்வி அடைந்தது.
ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் மழை காரணமாக தடைபட்டன. நடப்புச் சாம்பியன் ரோஜர்பெடரருக்கும் (சுவிட்ஸர்லாந்து), செபாஸ்டியன் குரோஸ்ஜீனுக்கும் இடையிலான போட்டியில் பெடரர் முன்னிலைவகித்தபோது மழை குறுக்கிட்டது. இதனையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்த ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications