தண்டவாளத்தில் லாரி, வெடி வெடித்து ரயில் நிறுத்தம், பெரும் விபத்து தவிர்ப்பு
ஒசூர்:
ஒசூர் அருகே கல்பாரம் ஏற்றி வந்த லாரி பிரேக் பிடிக்காமல் தண்டவாளத்தில் ஏறி நின்றது. ரயில் நிலையஅதிகாரியின் சமயோசிதத்தால் 1,200 பயணிகளுடன் வந்த பெங்களூர் பாசஞ்சர் ரயில் பெரும்விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்பட்டது.
சேலத்தில் இருந்து பெங்களூருக்கு பாசஞ்சர் ரயில் புறப்பட்ட அந்த ரயில் ஒசூர் அருகேயுள்ள கெலமங்கலத்திற்குவந்து சேர்ந்தது. அப்போது ஒசூர் -- கெலமங்கலத்திற்கு இடையே நவதி என்னும் இடத்தில் கல்பாரம் ஏற்றி வந்தலாரி ஒன்று பிரேக் பிடிக்காததால் தாறுமாறாக ஓடி ரயில் தண்டவாளத்தில் ஏறி நின்றது.
உடனடியாக லாரி டிரைவர் மாதவன் ஒசூர் ரயில் நிலைய சூப்பரின்டெண்ட் ராஜசேகருக்கு தகவல் கொடுத்தார்.ராஜசேகர் கெலமங்கலத்திற்குத் தகவல் கொடுக்கும்முன் ரயில் அங்கு இருந்து புறப்பட்டு விட்டது.
கல்பாரத்துடன் இருக்கும் ரயில் மோதினால் பெரும் விபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த ராஜசேகர்,பாயின்ட்மேன் மாதைய்யனை அழைத்து அவரிடம் சிகப்புக்கொடி மற்றும் ரயில்வே துறையில் அவசர நிமித்தம்வெடிக்கப் பயன்படுத்தும் டெட்டனேட்டர் வெடியை வெடிக்க வைக்கும் கருவியையும் கொடுத்து ரயிலைநிறுத்தும்படி உத்தரவிட்டார்.
மாதைய்யன் மோட்டார் சைக்களில் வேகமாகச் சென்று லாரி நின்றிருந்த இடத்துக்கு முன்பு ரயில் பாதையில்வெடியை வெடிக்க வைத்தார். மேலும் சிகப்புக்கொடியையும் காட்டி ரயிலை நிறுத்தும்படி சைகை காட்டினார்.
இதைப் பார்த்த ரயில் என்ஜின் டிரைவர் உடனே ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.அந்த ரயிலில் 1,200 பேர் பயணம் செய்து வந்ததாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்பிறகு ரயில் பயணிகளின் உதவியால் லாரி தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. விபத்தைசமயோசிதமாக தடுக்க ஏற்பாடு செய்த ராஜசேகரையும் அவருக்கு உதவிய மாதைய்யனையும் ரயில் பயணிகள்கைகுலுக்கி பாராட்டினர்.
இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மாதவனைக் கைது செய்தனர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications