மத்திய சிறையில் முகம்மது அலி அடைப்பு
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு 4 நாள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த சிபிசிஐடிடிஐஜி முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர், எல்.ஐ.சி. அதிகாரி சாது ஆகியோர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து அவர்களை வரும் 16ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அலமேலு நடராஜன்உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரூ. 30,000 கோடி போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் தொடர்புடைய நிஜாமுதீன் என்பவரை சென்னையில் 2ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தபோது அவரை தப்ப விட்டதாக முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர்ஆகியோர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர போலி முத்திரைத் தாள்களை விற்க நிஜாமூதீனுக்கு உதவி செய்த மதுரை எல்.ஐ.சி. பயிற்சி மைய நிர்வாகஅதிகாரி ராமசாமி சாது என்பவரும் கைதாகியுள்ளார்.
இவர்கள் 3 பேரையும் சிபிஐ அதிகாரிகள் தங்களது காவலில் வைத்து கடந்த 4 நாட்களாக விசாரித்து வந்தனர்.இதற்கான அனுமதியை சென்னை 10வது பெருநகர குற்றவியல் நீதிபதி அலமேலு நடராஜன் வழங்கியிருந்தார்.
4 நாள் காவல் முடிந்தவுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு அவர்களை தன்னிடம் ஆஜர்படுத்த வேண்டும் என்றும்நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மூவரும் இன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது மூவரின் சார்பிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதனை நாளை விசாரிப்பதாகக் கூறியநீதிபதி, மூவரையும் 16ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அலிக்கும், சங்கருக்கும் சிறையில் முதல் வகுப்பு அறை வழங்கப்பட வேண்டும் என அவர்களது வழக்கறிஞர்கள்கோரினர். இதை நீதிபதி அனுமதித்தார்.
இதையடுத்து மூவரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றக் காவலில் சிறையில் இருக்கும் கைதிகளைபோலீசாரோ, சிபிஐயோ விசாரிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications