மாநில ஆளுநர்களாக காங். தலைவர்கள் நியமனம்
டெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவர்களான நவல் கிஷோர் சர்மா, எஸ்.சி. ஜமீர் ஆகியோரும், முன்னாள் மத்தியஉளவுப் பிரிவின் தலைவரான டி.வி.ராஜேஸ்வரும், முன்னாள் மத்திய அரசு ஊழியர்தேர்வாணையத் தலைவரான ஏ.ஆர். கித்வாய் ஆகியோரும் மாநில ஆளுநர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்.
சர்மா குஜராத் ஆளுநராகவும், கித்வாய் ஹரியாணா ஆளுநராகவும், ராஜேஸ்வர் உத்தரப் பிரதேசஆளுநராகவும், ஜமீர் கோவா துணை நிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சர்மா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தவர். ராஜேஸ்வர், முன்னாள்மத்திய உளவுப் பிரிவின் (ஐபி) தலைவராக இருந்தவர்.
ஜமீர் முன்னாள் நாகாலாந்து முதல்வராகவும், கித்வாய் மத்திய அரசு ஊழியர் தேர்வாணையத்தின்தலைவராகவும் இருந்தவராவர்.
இந்த மாநிலங்களில் ஆளுநர்களாக இருந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.வைச் சேர்ந்த பாபு பரமானந்த்,விஷ்ணுகாந்த் சாஸ்திரி, கைலாஷ்பதி மிஸ்ரா, கேதார்நாத் சஹானி ஆகிய நால்வரையும் கடந்தவாரம் மத்திய அரசு பதவி நீக்கம் செய்தது நினைவுகூறத்தக்கது.
அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநில ஆளுநரும் முக்கிய பா.ஜ.க. தலைவருமான மதன்லால் குரானாநீக்கப்படவில்லை. இவருக்கும் பா.ஜ.க. முதல்வரான உமா பாரதிக்கும் இடையே அதிகாரப் போட்டிநடந்து வருகிறது.
இதனால் குரானா ஆளுநராக நீடித்தால் அம் மாநில பா.ஜ.கவில் குழப்பத்தை உருவாக்கலாம் என்றுகாங்கிரஸ் நினைக்கிறது. இதனால் அவரை ஆளுநர் பதவியில் இருந்து நீக்காமல் விட்டுவைத்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications