சென்னை வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
சென்னை - மதுரை:
மதுரை உயர்நீதிமன்றக் கிளை விவகாரம் தொடர்பாக தாங்கள் நடத்தி வந்த வேலைநிறுத்தத்தை சென்னைஉயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். நாளை முதல் பணிக்குத் திரும்ப முடிவெடுத்தனர்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அதிகார வரம்பு குறித்து எழுந்துள்ள சர்ச்சையை சரி செய்வதற்கு சுபாஷன் ரெட்டிதலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்றத்திற்கு அதிக மாவட்டங்கள் ஒதுக்குவதற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக அவர்கள் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில்ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குப் போட்டியாக மதுரை வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந் நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லஹோட்டியின் அறிவுரைப்படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டி 8 பேர் கொண்ட நீதிபதிகள் குழுவை அமைத்துள்ளார். குழுவுக்கு அவர் தலைமைவகிக்கிறார். குழுவில், நீதிபதிகள் கற்பகவிநாயகம், கோவிந்தராஜன், சிர்புர்கர், சதாசிவம், பாலசுப்ரமணியன்,பி.டி.தினகரன், இப்ராகிம் கலிபுல்லா, முருகேசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக சுபாஷன் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜூலை 7ம் (புதன்கிழமை) தேதி பிற்பகல்2.15 மணிக்கு இந்தக் குழுவின் முதல் கூட்டம் நடக்கிறது. இதில் சென்னை மற்றும் மதுரை வழக்கறிஞர்சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள்.
நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் வாபஸ் பெற ஒத்துக் கொண்டுள்ளது.அதேபோல, மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் தனது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான்,திட்டமிட்டபடி 24ம் தேதி மதுரை கிளையை திறக்க முடியும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்னிடம்தெரிவித்துள்ளார்.
மதுரையில் கிளை திறக்கப்பட்டவுடன், நானும், நீதிபதி சிர்புர்கரும் மதுரையிலேயே சில நாட்கள் தங்கியிருந்துவழக்குகளை விசாரிக்க உள்ளோம். எனவே மதுரை கிளை திறப்புக்குப் பின்னர் உடனடியாக செயல்பாட்டுக்குவரும்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு 14 நீதிபதிகளை நியமிக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்,இதுதொடர்பாக முறைப்படியான கடிதம் அனுப்பியிருந்தேன். ஆனால் 7 நீதிபதிகளை மட்டுமே அரசுநியமித்துள்ளது என்றார் ரெட்டி.
இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமையிலானவழக்கறிஞர்கள் குழுவினர், தலைமை நீதிபதியை இன்று சந்தித்துப் பேசினார்கள். அப்போது மதுரை கிளைக்குஅதிகபட்ச மாவட்டங்களை ஒதுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினார்கள்.
அவர்களிடம், நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கையை உடனடியாகக் கைவிடுமாறும், அவர்களது கோரிக்கைகள் 9பேர் குழுவால் பரிசீலிக்கப்படும் என்றும் சுபாஷன் ரெட்டி தெரிவித்தார்.
இதனையடுத்து தங்களது வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்வதாகவும், நாளையிலிருந்து பணிக்குத்திரும்பவிருப்பதாகவும் சென்னை வழக்கறிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
போராட்டம் தொடரும்: மதுரை வழக்கறிஞர்கள்
மதுரை உயர்நீதிமன்றக் கிளையை நிர்மாணிப்பதற்கான குடியரசுத் தலைவரின் அறிக்கை முறைப்படிவெளியிடப்படும் வரை போராட்டத்தை வாபஸ் பெறப் போவதில்லை என்று மதுரை வழக்கறிஞர்கள்தெரிவித்துள்ளனர்.
மதுரை கிளைக்கான எல்லை வரம்பு குறித்து முடிவு செய்ய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிதலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மதுரையில் தென் மாவட்ட வழக்கறிஞர்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில்மதுரை கிளை விவகாரம் தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
இதற்கிடையே, மதுரை வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டால்தான் கிளையை திறக்கமுடியும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லஹோட்டி கூறியதாக, சுபாஷன் ரெட்டி தெரிவித்துள்ளது குறித்துவிவாதிக்க மதுரை வழக்கறிஞர்கள் சங்க அவசரக் கூட்டம் நேற்று இரவு நடந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் சங்க பொதுச் செயலாளர் ராமசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை கிளையைதிறப்பதற்கான குடியரசுத் தலைவரின் அறிவிக்கை முறைப்படி வெளியிடப்பட வேண்டும், ரிட் மனுக்களைவிசாரிக்கும் அதிகாரம் மதுரை கிளைக்கு வழங்கப்பட வேண்டும், திட்டமிட்டபடி 14 மாவட்டங்களை மதுரைகிளைக்கு ஒதுக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடருவது என்று முடிவு எடுக்கப்பட்டது. மேலும்சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் திருச்சி வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் சங்கத்தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராமசாமி.












Click it and Unblock the Notifications