கராச்சிக்கு கண் கொடுத்த சென்னை !
சென்னை:
பிறவியிலேயே 2 கண்களும் இல்லாத, பாகிஸ்தானைச் சேர்ந்த 1 வயது சிறுவனுக்கு சென்னையைச் சேர்ந்தஇருவரின் கண்கள் பொருத்தப்பட்டு அந்த சிறுவன் பார்வை பெற்றுள்ளான்.
பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் முகம்மது சலீம். வங்கி ஊழியரான இவரது நான்காவது குழந்தைமுகம்மது அகம்மது. பிறவியிலேயே முகம்மது அகம்மதுவுக்கு கண் பார்வை இல்லை.
பாகிஸ்தானின் பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை செய்து பார்த்தும் முகம்மதுவுக்கு பார்வை வராது என்றுடாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இந் நிலையில் சென்னையில் உள்ள அகர்வால் கண் மருத்துவமனைக்குச்செல்லுமாறு சில டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து அகர்வால் மருத்துவமனைக்கு தனது மகனை அழைத்துக் கொண்டு வந்தார் சலீம். முகம்மதுவின்கண்களை ஆய்வு செய்து பார்த்த அகர்வால் மருத்துவமனை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் மாற்றுக்கண்களைப் பொருத்த முடிவு செய்தனர்.
அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் சென்னையைச் சேர்ந்த இரண்டு பேர் தங்களது கண்களை மருத்துவமனைக்குக்தானமாக கொடுத்திருந்தனர். முதல் கட்டமாக ஒரு கண்ணில் அறுவைச் சிகிச்சை செய்து மாற்றுக் கண்பொருத்தப்பட்டது. 2 நாட்கள் கழித்து இன்னொரு கண்ணும் பொருத்தப்பட்டது.
தற்போது முகம்மதுவுக்கு இரு கண்களாலும் பார்க்க முடிகிறது. பிறந்தது முதல் பார்வையை இழந்து இருந்தமுகம்மது இப்போதுதான் முதல் முறையாக உலகைக் காண்கிறான். தங்களது குழந்தையால் வெளி உலகைப் பார்க்கமுடிவது முகம்மதுவின் பெற்றோருக்கு பெரும் மகிழ்ச்சியையும், எல்லையில்லாத ஆனந்தத்தையும் கொடுத்துள்ளது.
விரைவில் பாகிஸ்தான் செல்லவுள்ள அவர்கள் 6 மாதம் கழித்து பரிசோதனைக்காக சென்னைக்கு வரவுள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications