கட்ட பஞ்சாயத்து செய்த பசுபதி பாண்டியன் கைது
தூத்துக்குடி:
ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக தேவேந்திர குல இளைஞர் பேரவை தலைவர் பசுபதிபாண்டியன் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஒரு வருடத்திற்கு முன்பு, தூத்துக்குடி, சகாயமாதா பட்டினம் என்ற பகுதியைச் சேர்ந்த துரைசிங், அவரது நண்பர்வேல்ராஜ் ஆகிய இருவரும், பசுபதி பாண்டியனை அணுகியுள்ளனர்.
முத்தையாபுரம் என்ற இடத்தில் உள்ள துரைசிங்குக்கு சொந்தமான இடத்தில், சிலர் அத்துமீறி மணல்எடுப்பதாகவும், இதனால் அவர்களை தட்டிக் கேட்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
இதை ஏற்றுக் கொண்ட பசுபதி பாண்டியன் இதை செய்து தருவதற்காக ரூ. 1 லட்சம் தரவேண்டும் என்றுகூறியதாகத் தெரிகிறது. இந் நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு பசுபதி பாண்டியன், திண்டுக்கல் நந்தவனப்பட்டிஎன்ற இடத்தில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஒரு மாதத்திற்கு முன்பு அவரும், அவரது ஆட்களும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தனர். தூத்துக்குடிக்குவந்த அவர்கள், துரைசிங்கை அணுகி ஏற்கனவே கேட்ட ரூ. 1 லட்சம் போக மேலும் ரூ. 1லட்சம் தருமாறுகேட்டுள்ளனர். இதற்கு துரைசிங் மறுத்துள்ளார்.
இதேசமயம், துரைசிங்கிடம் கொடுத்த பணத்தை வசூலித்துத் தருமாறு பாமகவைச் சேர்ந்த 3 பேர் பசுபதிபாண்டியனை அணுகியுள்ளனர். இதையடுத்து துரைசிங்கையும், வேல்ராஜையும் கடத்திக் கொண்டு வருமாறுபசுபதி பாண்டியன் உத்தரவிடவே, அவரது கூட்டாளிகள் சென்று இருவரையும் கட்டாயப்படுத்தி அழைத்துவந்தனர்.
இவர்களில் வேல்ராஜ் தப்பி வந்து விட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து பசுபதி பாண்டியனையும், அவரது கூட்டாளிகள் 7 பேரையும் கைது செய்தனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பசுபதி பாண்டியன் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில்இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications