பிள்ளையார்பட்டி: பக்தர்களிடம் பணிந்தது அரசு
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் திட்டமிட்டபடி வருகிற 8ம் தேதிகும்பாபிஷேகம் நடத்தப்படும் என தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் 16 கோயில்களின்கும்பாபிஷேகத்தை ஒரு ஆண்டு வரை தள்ளி வைத்து தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை உத்தரவிட்டது.
இதற்கு பிள்ளையார்பட்டி பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் கும்பாபிஷேகப் பணிகளைநடத்தி வந்த பிள்ளையார்பட்டி நகரத்தார் அறக்கட்டளை நிர்வாகம் கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டதற்குஎதிர்ப்பு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து அரசின் தடையை மீறி திட்டமிட்டபடி 8ம் தேதி கும்பாபிஷேகத்தை நடத்துவது எனஅறக்கட்டளை முடிவு செய்தது. கும்பாபிஷேகத்திற்கான பூஜைகளும் தொடங்கப்பட்டன. இதனால் அதிர்ச்சிஅடைந்த இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் பிள்ளையார்பட்டி விரைந்தனர்.
அங்கு அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.கும்பாபிஷேகத்தை தள்ளிவைக்கும் முடிவை ஏற்கவே முடியாது என்று அனைத்துத் தரப்பினரும் திட்டவட்டமாகதெரிவித்து விட்டனர்.
இதனால் வேறு வழியின்றி, திட்டமிட்டபடி 8ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தலாம் என இந்து அறநிலையத் துறைஒப்புதல் வழங்கியுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications