கட்டண உயர்வுகள் இல்லை
டெல்லி:
பயணிகள், சரக்கு கட்டண உயர்வுகளே இல்லாத ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் இன்று தாக்கல் செய்தார்.
2004-05ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்றுமக்களவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை லாலு படித்தபோது பா.ஜ.க. உறுப்பினர்கள்அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ரூ. 14,198 கோடியிலான இந்த பட்ஜெட்டில் 17 இடங்களில் உள்ள 1,650 கி.மீ. நீள மீட்டர் கேஜ்பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
* ரயில்களில் பெண் டிக்கெட் பரிசோதகர்களை நியமிக்கப்படுவர்.
* பயணிகள் ரயில்களிலும் எந்த வகுப்புக்கான கட்டணமும் உயர்த்தப்படவில்லை.
* சரக்குக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை.
* மத்திய அரசு பணிகளுக்கு இன்டர்வியூவுக்குச் செல்லும் வேலையில்லா இளைஞர்களுக்கு இலவசரயில் பயணம்.
* காலமான ராணுவத்தினரின் மனைவிகள், ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குரயில் கட்டணத்தில் 75 சதவீதம் கட்டண சலுகை.
* ரயில் நிலையங்களில் உள்ள கடைகள் நடத்த தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், போரில்உயிரிழந்த ராணுவத்தினரின் மனைவிகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு.
* ரயில்வேயில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் கோட்டாக்களில் காலியாக உள்ளபதவிகளை நிரப்ப, உடனடியாக வேலைக்கு ஆள் சேர்க்க முடிவு.
* ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டும் சரக்குக் கட்டணம் 7.1 சதவீதம் அதிகரிப்பு.
* நாடு முழுவதும் 1,306 ரயில் பாலங்களை புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கீடு. மேலும் 411 புதியபாலங்கள் கட்ட முடிவு.
* இந்த ஆண்டில் 273 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்க முடிவு.
* ரயில்களில் முடிந்த வரை காதி துணிகளை பயன்படுத்தவும், லஸ்சி போன்ற உள்நாட்டுபானங்களை அறிமுகப்படுத்தவும் உத்தரவு. ரயில்களில் பால், தயிர் சாதம் உள்ளிட்ட தரமானஉணவுப் பொருள்களை விற்க ஏற்பாடு.
* பெங்களூரில் ரயில்வே விபத்து நிவாரணம் மற்றும் மருத்துவக் கல்விக்கான மையம் அமைக்கத்திட்டம்.
* காதுகேளாதோருடன் துணைக்குப் பயணம் செய்யும் நபருக்கும் 50 சதவீத கட்டண சலுகைவழங்கப்படும்.
முன்னதாக லாலு யாதவ் பட்ஜெட்டை படிக்க ஆரம்பித்தவுடன், கிரிமினல் வழக்குகளில்தொடர்புடையவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி கோஷமிட்டபடியே, பா.ஜ.க.உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறினர்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications