முகம்மது அலிக்கு எதிராக சிபிஐ டேப் ஆதாரம்
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிஐஜி முகம்மது அலி உள்ளிட்ட 3 பேரின்ஜாமீன் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த வழக்கில், சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர், மதுரை எல்.ஐ.சி. அதிகாரி ராமசாமி சாதுஆகிய மூன்று பேரும் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
3 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன்நீதிமன்றத்தில் மனு செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்றவ நடப்பதாக இருந்து இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தபோது, முகம்மது அலிக்கு எதிராக தொலைபேசி உரையாடல்அடங்கிய டேப் ஆதாரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் சமர்ப்பித்தனர்.
போலி முத்திரைத் தாள் மோசடி மன்னன் தெல்கியுடன் தமிழக போலீஸ் அதிகாரிகள் சிலர் தொலைபேசியில்பேசியுள்ளதாகவும், அந்த ஆவணங்களும் சமர்பிக்கப்படும் என்றும் கூறிய சிபிஐ வழக்கறிஞர்கள், இது ஆரம்பம்தான். போகப் போக ஏராளமான ஆவணங்களை சமர்ப்பிப்போம்.
மேலும், முகம்மது அலிக்கு எதிரான புகாருக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாகவும், அவரை ஜாமீனில்விடுதலை செய்தால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என்றார் சிபிஐ வழக்கறிஞர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அதேபோல, சிறைச் சாலையில் தனக்கு முதல் வகுப்பு ஒதுக்கக் கோரி ராமசாமி சாது தாக்கல் செய்துள்ள மனுமீதான விசாரணையும் இன்றே நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications