மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு 14 மாவட்டங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளை வரும் 24ம் தேதி முதல் செயல்படத்தொடங்கும் என ஜனாதிபதி அப்துல் கலாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மதுரை கிளையின் கீழ் 14 மாவட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம்வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த மாவட்டங்களின் விவரம்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம்,விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகியவை.

இதையடுத்து இந்தப் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

மதுரையில் கிளை அமைப்பதால் தங்களது வருமானம் அடிபடும் என்பதால், அதற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். ஆனால், அதையும் மீறி கிளைகட்டப்பட்டது.

பின்னர் இந்தக் கிளைக்கு குறைந்த அளவு மாவட்டங்களையே ஒதுக்க வேண்டும் என்று புதியபோராட்டத்தில் சென்னை வழக்கறிஞர்கள் குதித்தனர்.

இந் நிலையில் திறப்பு விழாவும் பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் மாநிலம் முழுவதுமே நீதிமன்றப்பணிகள் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டது. மதுரை கிளைக்கு ஒதுக்கப்பட வேண்டியமாவட்டங்களின் எண்ணிக்கை குறித்து முடிவு செய்ய தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிதலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவுக்கு வழிகாட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாலகிருஷ்ணன், லட்சுமணன் ஆகியோரைஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ல்கோதி நியமித்துள்ளார்.

இக் குழு இன்று கூடி விவாதிக்கவுள்ளது.

இந் நிலையில் மதுரை கிளை 24ம் தேதி திறக்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனாதிபதிவெளியிட, மதுரை கிளைக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களை மத்திய சட்டத்துறை அமைச்கம்வெளியிட்டுவிட்டது.

இந்த இரு அறிவிப்புகளும் நேற்றிரவில் வெளியிடப்பட்டன.

மதுரை கிளைக்கு 8 மாவட்டங்களை மட்டுமே ஒதுக்க வேண்டும் என்றும், ரிட் மனுக்களை விசாரிக்கும்அதிகாரம் வழங்கப்படக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரி வருவதுகுறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+