குருவாயூரில் கண் கலங்க ஜெயலலிதா பிரார்த்தனை
குருவாயூர்:
முதல்வர் ஜெயலலிதா இன்று குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது அவர்கண் கலங்கியதாக கோவில் நிர்வாகிகள் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
இன்று காலை 8 மணிக்கு தோழி சசிகலாவுடன் சென்னையில் இருந்து தனி விமானத்தில் கொச்சிநெடும்பச்சேரி சர்வதேச விமான நிலையம் சென்ற ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர்சென்றார்.
அங்கு அரியனூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்ட தாற்காலிக ஹெலிகாப்டர் தளத்தில்அவர்கள் தரையிறங்கினார். அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கோவிலுக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும்காரில் சென்றனர்.
அங்கு அவருக்கு கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் அப்புக்குட்டன் நம்பியார், கோவில்நிர்வாகி அனில் நம்பியார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது ஜெயலலிதா கண் கலங்கினார். கர்ப்பக கிரகத்தில்சுவாமிக்கு நெய் விளக்கு ஏற்றிய ஜெயலலிதா, உண்டியில் சில நாணயங்களையும் போட்டார். பின்னர் ரூ. 10,000செலவில் பால் பாயாச நைவேத்யம் செய்தார்.
மூன்றாண்டுகளுக்கு முன் கோவிலுக்கு தான், தானமாகத் தந்த யானைக் குட்டியான கிருஷ்ணாவுடன்சிறிது நேரத்தை ஜெயலலிதா செலவிட்டார்.
சுமார் 20 நிமிடங்கள் அங்கிருந்த ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் கொச்சி புறப்பட்டார். கோவில் வாயிலில்நிருபர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டபோது, பதிலளிக்க ஜெயலலிதா மறுத்துவிட்டார்.
பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானத்தில் சென்னை திரும்பினார்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி குருவாயூரில் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.குருவாயூர் கோவிலைச் சுற்றிலும் உள்ள விடுதிகள், பொது இடங்கள் ஆகியவற்றில் போலீஸார் தீவிர சோதனைநடத்தினர்.
இதுதவிர தமிழகத்திலிருந்து வந்துள்ள 40 காவல்துறை அதிகாரிகளும் குருவாயூர் கோவிலைச் சுற்றிலும்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஜெயலலிதாவுக்காக அரியனூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு,அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
கோவிலில் பெருமளவில் பக்தர்கள் திரண்டிருந்த நிலையில் ஜெயலலிதா அங்கு சென்றார். ஆனாலும்,பக்தர்களுக்கு சிரமம் உண்டாகாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கேரள போலீசார் செய்திருந்தனர்.
முதல்வரின் இந்தப் பயணம் குறித்து தலைமைச் செயலகமோ. போயஸ் கார்டன் வட்டாரமோ இதுவரை மூச்சுகாட்டவில்லை.


Click it and Unblock the Notifications
