பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் விரல்ரேகை கட்டாயம்
சென்னை:
நாளை முதல் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் செய்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் விரல்ரேகையும் பதிவு செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் பாஸ்போர்ட்களுக்கு விண்ணப்பம் செய்வது எளிமையாக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் மற்றும் செல்போன்களில் பாஸ்போர்ட்டின் நிலை (ஸ்டேட்டஸ்)குறித்த விவரங்களை அனுப்பவும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் திட்டமிட்டமிட்டுள்ளன.
இது குறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மதிவதணன் நிருபர்களிடம் கூறுகையில்,
கைரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாஸ்போர்ட்விண்ணப்பங்களை எளிமையாக்கவுள்ளோம்.
இப்போது பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், மூன்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தரவேண்டியுள்ளது. இனி அது இரண்டே விண்ணப்பங்களாகக் குறைக்கப் போகிறோம்.
அதே போல இப்போதைய விண்ணப்பங்களில் 45 விதமான கட்டங்களில் விவரங்களை எழுதவேண்டியுள்ளது. அதை 22 ஆகக் குறைக்கப் போகிறோம்.
பழைய விண்ணப்பங்களில் 8 விதமான அபிடவிட்களின் கையெழுத்துக்கள் கோரப்படும். புதியவிண்ணப்பங்களில் 5 கையெழுத்துக்கள் இருந்தால் போதும்.
புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகம், ஸ்பீட் போஸ்ட் தபால்அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வாங்கிக் கொள்ளலாம்.
மேலும், இ-மெயில் மற்றும் செல்போன்கள் மூலமாகவும் விண்ணப்பதாரக்களுக்கு பாஸ்போர்ட்டின்நிலை (ஸ்டேட்டஸ்) குறித்த விவரங்களை அனுப்பவும் திட்டமிட்டமிட்டுள்ளோம்.
வருமான வரி தாக்கல் செய்ததற்கான ஆதாரத்தை சமர்பித்தால், இசிஎன்ஆர் எனப்படும்வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான அனுமதி இனி எளிதாகவே கிடைக்கும். வருமான வரிகட்டியதற்கான பேன் அட்டையைக் காட்டினாலேயே இந்த சலுகையைப் பெற முடியும்.
இனிமேல் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து ஸ்பீட் போஸ் மூலமே கூடபாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு அனுப்பலாம் என்றார் மதிவதணன்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications