ரயில் பட்ஜெட்: தமிழகத்துக்கு மகிழ்ச்சியில்லை- ஜெ
சென்னை:
தமிழகத்தில் நிலுவையில் இருக்கும் ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ரயில்வேபட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதனால் இந்தபட்ஜெட்டால் தமிழகம் மகிழவில்லை என்று கூறியுள்ளார்.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட் குறித்து ஜெயலலிதாவெளியிட்ட அறிக்கையில்,
நீண்ட காலத் திட்டங்களை கருத்தில் கொள்ளாமல் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ரயில்வேயின் வளர்ச்சிக்கும் இந்த பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் இல்லை, நிதி ஒதுக்கீடும் இல்லை.
இந்த அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்டே பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. ரயில்வே அமைச்சர்லாலு பிரசாத் யாதவ், தனக்குப் பிடித்த சில திட்டங்களை (ரயில்களில் பால். மோர் விற்பது)அறிவித்துள்ளார். இதன்மூலம் இந்த மோசமான பட்ஜெட்டில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயல்கிறார்.
தமிழகத்துக்கும் இந்த பட்ஜெட்டால் எந்தப் பலனும் இல்லை. நீண்ட நாட்களாக கிடப்பில்போடப்பட்டிருக்கும் சென்னை- பாண்டிச்சேரி இடையே மகாபலிபுரம் வழியாக ரயில் பாதைஅமைக்கும் திட்டம் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
அதே போல சென்னை சென்ட்ரல்- எழும்பூர் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி குறித்தும்இதில் அறிவிப்பேதும் இல்லை.
கூடலூர்- விருத்தாசலம்- சேலம் ரயில் பாதையை விரைவில் முடிக்கவும் பட்ஜெட்டில் அறிவிப்புஇல்லை.
சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகள் 2005ம் ஆண்டு ஏப்ரலில்முடிவடையும் என அறிவித்துள்ளார்கள். இந்தத் திட்டத்தை ரயில்வே பல காலம்தாமதப்படுத்திவிட்டது. இனியாவது சொன்ன நேரத்தில் திட்டத்தை முடிக்க அந்தத் துறை முன் வரவேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications