ஆசிய கோப்பை: 2 தமிழக வீரர்கள் நீக்கம்
சென்னை:
இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கச் செல்லும் அணியில் தமிழகவீரர்களாக முரளி கார்த்திக் மற்றும் ஹேமங் பதானி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 16ம் தேதி கொழும்பில் தொடங்குகிறது. இதற்கான இந்தியகிரிக்கெட் அணியின் 2 வார கால பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. 20 பேர் கொண்ட உத்தேச அணிபயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
நேற்றுடன் பயிற்சி முடிவடைந்த நிலையில் 14 பேர் கொண்ட இறுதி அணி அறிவிக்கப்பட்டது. அதில் முரளிகார்த்திக், ஹேமங் பதானி ஆகியோர் இடம் பெறவில்லை. அதே போல ரோகன், ரமேஷ் பவார், அகார்கர்,பண்டாரியும் நீக்கப்பட்டனர்.
சில காலம் விளையாடாமல் இருந்த விக்கெட் கீப்பர் பார்த்தீவ் படேல், ஹர்பஜன், ஜகீர் கான் ஆகியோர் மீண்டும்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் கங்குலி,
இலங்கை ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி திருப்தி தரும் விதமாக உள்ளது. அதில், மிகச் சிறப்பாகவிளையாடி கோப்பையை வெல்வோம்.
ஹர்பஜன் சிங் அணியில் இடம் பெற்றிருப்பது கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது. பேட்டிங்குக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:
சவுரவ் கங்குலி- கேப்டன்
ராகுல் திராவிட்- துணை கேப்டன்
டெண்டுல்கர்
யுவராஜ் சிங்
வீரேந்திர ஷேவாக்
விவிஎஸ் லட்சுமண்
முகம்மத் கைப்
அனில் கும்ப்ளே
பார்த்தீவ் படேல்
ஹர்பஜன் சிங்
ஆஷ்ஷ் நெஹ்ரா
ஜகீர் கான்
பாலாஜி
இர்பான் பதான்
இந்த அணி 13ம் தேதி கொழும்பு செல்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications