திருக்குறளுக்கு தடை விதித்த மத்திய அரசு !
டெல்லி:
தொன்மை வாய்ந்த திருக்குறள் நூலின் ஆங்கிலப் பிரதியை அச்சிடுவதற்கு மத்திய அரசு திடீர் என்று தடைவிதித்துள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சி போய் தற்போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவியில் உள்ளது. பாஜக ஆட்சிக் காலத்தில்இந்துத்துவாவை முன்னிருத்தி, தேசிய கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் சார்பில் பல்வேறு நூல்களை அச்சிடும்பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந் நிலையில், காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் மத்திய மனித வள அமைச்சகம், தேசிய கல்வி மற்றும் ஆய்வுமையத்தின் பணிகளை முழுமையாக மறுபரிசீலனை செய்து, சில புத்தகங்கள் அச்சிடுவதை நிறுத்தி வைக்கஉத்தரவிட்டுள்ளது. அதில் ஒன்றுதான் திருக்குறள்.
2000ம் ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறளை மதங்களைக் கடந்த உலகப் பொதுமறையாக உலகம் முமுழுவதும்ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், மதம் சார்ந்த வாசகங்கள் இந்த நூலில் இருப்பதாக மத்திய மனித வளஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் நூலை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே அச்சிடுமாறு தேசிய கல்வி மற்றும் ஆய்வு மையத்திற்குமனித வள அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருக்குறள் குறித்து துளியும் தெரியாத சில வட இந்திய அதிகாரிகளே இந்த உத்தரவுக்குக் காரணமாக இருக்கவேண்டும் என்று தெரிகிறது.
மத்திய மனித வள அமைச்சகத்தின் இந்த உத்தரவு இலக்கிய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருக்குறளை, மத நூலாக கருதும் அளவுக்கு அந்த அதிகாரிகளின் அறிவுத் திறன் உள்ளது.
திருக்குறள் தவிர, பிரபல காங்கிரஸ் தலைவரான கரண்சிங் எழுதிய நூல் ஒன்றையும் அச்சிடுவதற்கு மனித வளஅமைச்சகம் தடை விதித்துள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications