கொழும்பு தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பல்ல: புலிகள்
கொழும்பு:
கொழும்பில் நேற்று நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும்இல்லை என விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது.
நேற்று, புலிகளின் தீவிர எதிர்ப்பாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின்அலுவலகத்துக்குள் செல்ல முயன்ற பெண்ணைத் தடுத்து நிறுத்திய போலீசார், அவரைகொள்ளுப்பிட்டி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
அப்போது அந்தப் பெண் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் அவரும், 4போலீசாரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
பிரதமரின் அலுவலம் உள்ளிட்ட முக்கிய தூதரகங்கள் அமைந்துள்ள பலத்த பாதுகாப்பு மிக்கஇடத்தில் நடந்த இந்தச் சம்பவத்துக்கு புலிகளே காரணம் என்று இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இந் நிலையில் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொழும்பில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.அமைதி முயற்சியை சீர்குலைக்க முயலும் சில சக்திகள் தான் இந்த குண்டுவெடிப்பை நடத்தியுள்ளன.
இந்தத் தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி,அமைதி முயற்சிகளை குலைக்க முயன்று வரும் சக்திகளின் வேலை தான் இது.
கருணா கும்பலுக்கு பாதுகாப்பும், அந்தக் கும்பல் கொழும்பில் சுதந்திரமாக சுற்றித் திரியஅனுமதியும் கொடுத்து வரும் இலங்கை போலீசாரும், ராணுவத்தினரும் தான் இந்தகுண்டுவெடிப்புக்குக் காரணம்.
கருணாவுக்கு ஆதரவும், உதவிகளும் செய்து வரும் வேலையை பாதுகாப்பு படையினர் நிறுத்தினால்மட்டுமே பேச்சுவார்த்தைக்குரிய அமைதியான சூழல் இலங்கையில் ஏற்படும்.
இவ்வாறு புலிகள் கூறியுள்ளனர்.
டக்ளஸ் பேட்டி:
இதற்கிடையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அளித்துள்ள பேட்டியில்,
நடந்த சம்பவத்தை மன்னிக்க நான் தயாராக இருக்கிறேன். வேலை கேட்பது போலத்தான் அந்தப்பெண் (மனித வெடிகுண்டு) வந்தார். நான சந்திக்கவில்லை என்றதும் போய்விட்டார். நான்உஷாராக இருந்திருக்காவிட்டால் கொல்லப்பட்டிருப்பேன்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியை மாலை போடுவது போலக் கொன்ற விடுதலைப்புலிகள், இப்படி மனித குண்டை எனக்கு அனுப்பியதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அரசியலுக்கு வரத் தயார் என்றால் நான் அரசியலை விட்டு விலகத்தயாராக இருக்கிறேன். கொள்கைகளை கொள்கைரீதியில் சந்திக்க வேண்டும். அதை விடுத்துவன்முறையால் சாதிக்கக் கூடாது.
இச் சம்பவத்தால் அமைதிப் பேச்சுவார்த்தை தடைபட வேண்டாம் என்று அதிபர் சந்திரிகாவைகேட்டுக் கொள்கிறேன் என்றார் டக்ளஸ்.
டெல்லியில் நார்வே அமைச்சர்:
இந் நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்குவதில் தீவிரம் காட்டி வரும் நார்வேவெளியுறவு அமைச்சர் ஜான் பீட்டர்சன் டெல்லி வந்துள்ளார்.
இலங்கை விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங்குடன் அவர் ஆலோசனைநடத்தினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications