சேது சமுத்திர திட்டத்துக்கு நிதி திரட்ட தனி வாரியம்
மதுரை:
சேதுசமுத்திரம் திட்டத்துக்காக நிதி திரட்ட தனி வாரியம் உருவாக்கப்படும் என மத்திய கப்பல்மற்றும் தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த அமைப்பை உருவாக்குவது குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்குமத்திய அரசும் நிதி ஒதுக்கும். இது தவிர தனியார், பொதுத்துறை நிறுவனங்கள், அமைப்புகளிடம்இருந்தும் நிதி திரட்டப்படும்.
இத் திட்டத்திற்கு நிதியுதவி செய்யும், இதில் பங்கேற்கவும் ஏற்கனவே பல தனியார் நிறுவனங்கள்ஆர்வம் காட்டியுள்ளன.
முதலில் இத் திட்டத்துக்கான தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறுகள் தொடர்பான அறிக்கைபெறப்படும். அடுத்ததாக பொதுத்துறை முதலீட்டு வாரியத்தின் அனுமதி பெறப்படும்.
பின்னர் திட்டம் குறித்த முழு அறிக்கை மத்திய அமைச்சரவையின் முன் வைக்கப்பட்டு இறுதிஅனுமதி வாங்கப்படும். அதன் பின் சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கும்.
இந்த வேலைகளை முடிந்த அளவுக்கு விரைவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.
முன்னதாக கோதண்டராமர் கோவில் வழியாக சேது சமுத்திரக் கால்வாய் அமைப்பதாகதிட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடலின் சுற்றுச்சூழலைக் காக்கும் வரையில் ஆடம்ஸ் பிரிட்ஜ்வழியாக இந்தக் கால்வாய் தோண்டப்படும்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்க மத்திய அரசு தயாராகஉள்ளது. ஆனால், இதற்கு தமிழக அரசின் அனுமதி தேவை. மத்தியில் 12 பேர் தமிழகத்தில் இருந்துஅமைச்சர்களாக இருக்கிறோம்.
எங்களைப் பயன்படுத்தி தமிழகத்துக்கு முடிந்த அளவுக்கு திட்டங்களைக் கொண்டு வர வேண்டியகடமை முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு. இது தூத்துக்குடி- கொழும்பு கப்பல் போக்குவரத்துக்கும்பொருந்தும்.
கொச்சியில் இருந்து கொழும்புக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க அனுமதி கோரி வருகிறார்கேரள முதல்வர் ஆண்டனி. அவரது கோரிக்கையை நிராகரிக்க முடியாத நிலையில் இருக்கிறேன்என்றார்.
(இலங்கைக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே பாக் ஜலசந்தி பகுதியில் பெரிய கப்பல்கள் செல்லும்அளவுக்கு கடலின் ஆழம் இல்லை. இதனால் வங்கக் கடல்- அரபிக் கடலுக்கு இடையில் பயணிக்கும்கப்பல்கள் இலங்கையை சுற்றிக் கொண்டு சென்று வருகின்றன.
சேது சமுத்திரத் திட்டப்படி கடலின் ஆழம் அதிகரிக்கப்படும். கடலிலேயே கால்வாய்வெட்டப்படும். இதனால் சர்வதேச கப்பல்கள் தமிழக துறைமுகங்கள் வழியாக வந்து செல்லும்.இதனால் கப்பல் சார்ந்த தொழில்கள் தென் தமிழகத்தில் பெருகும். இது தமிழகத்தின் கனவுத்திட்டமாக இருந்து வருகிறது.)
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications