போலி முத்திரைத் தாள்: சிபிஐயிடம் சிக்கிய பெண்
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசக் கும்பலுக்கும் சில முக்கிய தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கும்நெருக்கமான சாந்தி என்ற பெண் ஒருவரும் சிபிஐயிடம் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது.
போலி முத்திரைத் தாள் மோசடி மன்னன் தெல்கியின் தமிழக கூட்டாளியான நிஜாமுதீனுக்குஉதவியாளராக இந்தப் பெண் வேலை பார்த்ததாகவும், இவருக்கு தமிழக போலீஸ் உயர்அதிகாரிகள் சிலருக்கும் நெருக்கம் இருப்பதாகவும் தெரிகிறது.
போலி பத்திரங்களை விற்பதற்காக நிஜாமுதீன் சென்னையில் தொடங்கிய சாரா எண்டர்பிரைசஸ்மற்றும் மெரீன சர்வீஸஸ் ஆகியவற்றை இந்த சாந்தி தான் நிர்வகித்து வந்துள்ளார்.
நிஜாமுதீனை கர்நாடக போலீசார் பிடித்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தபோது, அவரை மீட்கசாந்தி முயன்றுள்ளார். இதற்காக தனது லிங்குகளை பயன்படுத்தியுள்ளார்.
சென்னையை அரும்பாக்கத்தைச் சேர்ந்த இந்த சாந்தியிடம் சிபிஐ ரகசிய விசாரணை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலியின் மகன்கள்இப்போது ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டனர். இவர்கள் மூலமாகமுகம்மது அலி சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பணத்தை முதலீடு செய்திருப்பதாக சிபிஐகருதுகிறது.
இதனால் இந்த இருவரையும் இந்தியாவுக்கு வருமாறு சிபிஐ கோரலாம். அவர்கள் வர மறுக்கும்பட்சத்தில் இன்டர்போலின் உதவியை சிபிஐ நாடும் என்று தெரிகிறது.
அதே போல தமிழக போலீஸ் கூடுதல் டிஐஜி ரமணி, ஐஜி ரமணி ஆகியோரிடமும் போலி முத்திரைத்தாள் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகம்மது அலியின்தவறுகளை இந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டது என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருகிறது.
மேலும், இவர்களுக்கு அலி மூலமாக தெல்கி கும்பல் பணம் தந்ததா என்று சிபிஐ விசாரித்துவருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications