சிவாஜி கணேசன் வீட்டில் தீ விபத்து
சென்னை:
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள தேக்கு மரப்படிக்கட்டுக்கள் எரிந்து சாம்பலாயின.
சிவாஜியின் வீடு சென்னை தியாகராய நகர் தெற்கு போக் சாலையில் உள்ளது. இந்த வீட்டில் நேற்றிரவு 10மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில் முதல் தளத்தில் உள்ள மரப் படிக்கட்டு முழுவதும் எரிந்து போனது.
தேக்கு மரத்தால் ஆன இந்தப் படிக்கட்டுகள் பல லட்சம் விலைமதிப்புள்ளதாகும். தீவிபத்து நடந்தபோதுசிவாஜியின் மகன்கள் நடிகர் பிரபு, அண்ணன் ராம்குமார் உள்ளிட்டோர் கீழ் தளத்தில் இருந்தனர்.
மேல் தளத்தில் ஒரு அறையில் சிவாஜியின் தம்பி மகன் கிரிதரன் தனது மனைவி குழந்தைகளுடன் இருந்தார்.படிக்கட்டுகள் தீப் பிடித்து எரிந்ததால் அவர்களால் கீழே வர முடியவில்லை.
அவர்களை தெற்கு போக் சாலை ஆட்டோ நிறுத்தத்தில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் காப்பாற்றி கீழே கொண்டுவந்தனர்.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் நடிகர் கமல் சிவாஜியின் வீட்டுக்கு வந்து, சம்பவம் குறித்துகேட்டறிந்தார்.
மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications