இது ஒரு வெத்து வேட்டு பட்ஜெட்: ஜெயலலிதா
சென்னை:
நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வெறும் வெத்து வேட்டு என முதல்வர்ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.
மிகச் சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாக சிதம்பரத்தை திமுக தலைவர் கருணாநிதிபாராட்டியுள்ள நிலையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
மத்திய பட்ஜெட் முழுக்க முழுக்க ஏமாற்றம் தருகிறது. மாநில அரசுகளின் உரிமைகளில்தலையிடுவது என்ற மத்திய அரசின் புதிய திட்டத்தை பட்ஜெட் மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது.
உருப்படியான திட்டங்கள் ஏதுமில்லாத இந்த பட்ஜெட்டில் ஏமாற்று வேலைகளே அதிகம் உள்ளன.வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்படவில்லை.
புதிய வரி விகிதங்களால் பண வீக்கம் தான் அதிகரிக்கும். இதனால் பாதிக்கப்படப் போவதுசாதாரண மக்கள் தான்.
பட்ஜெட் உரையில் வெட்டிக் கூச்சலும், வெத்து வேட்டும் தான் நிறைந்துள்ளன. வளர்ச்சிக்குரியஎந்த செயல் திட்டமும் இதில் இல்லை. கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகளுக்கு பணிந்து பட்ஜெட்போடப்பட்டுள்ளதே தவிர, நாட்டின் வளர்ச்சி கருத்தில் கொள்ளப்படவில்லை.
நீர் ஆதாரத்தைப் பெருக்க ஏரிகள், குளங்களை மத்திய அரசே தூர்வாரி சீர் செய்யப் போவாதக்கூறியுள்ளது. இந்த வேலைகள் மாநில அரசுகளால் செய்யப்படுபவை. இப்போது இதில் தலையிடமத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்க முயற்சிநடக்கிறது.
ஏரிகள் தூர் வாரி நீர் ஆதாரத்தைப் பெருக்கும் பணிகளை தமிழகம் எப்போதோ தொடங்கிவிட்டது.நாங்கள் அடுத்த கட்ட திட்டங்களை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்.
மேலும் பிற்பட்ட மாநிலங்களின் வளர்ச்சிக்கு என தனி வாரியத்தை அமைக்கப் போவதாகபட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் உழைப்பாலும், சிறந்த நிர்வாகத்தாலும் உயர்ந்தமாநிலங்களை ஒதுக்கும் வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
இந்தச் செயல் சிறந்த நிர்வாகம் கொண்டுள்ள மாநில அரசுகளுக்கு எதிரானது. இதனால்செயலின்மையும், சோம்பேறித்தனம் தான் வளரும். இது தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு எதிரானசெயல்.
தமிழகத்தில் இருந்து 12 அமைச்சர்கள் இருந்தும் இதை எப்படி அவர்கள் அனுமதித்தார்கள் என்றுதெரியவில்லை.
மொத்தத்தில் பெரும் ஏமாற்றம் தந்துள்ளது இந்த பட்ஜெட்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications