ராஜ்குமாரை மீட்க ரஜினிடம் தரப்பட்ட ரூ. 20 கோடி
பெங்களூர்:
வீரப்பனிடம் இருந்து நடிகர் ராஜ்குமாரை மீட்க, போலி முத்திரைத் தாள் மோசடி மன்னன் தெல்கியிடம் இருந்து ரூ.20 கோடியைப் பெற்று, அதை ரஜினிகாந்தின் மேனேஜரிடம் கொடுத்ததாக ஓய்வு பெற்ற கர்நாடக மூத்த போலீஸ்அதிகாரி கூறியுள்ளார்.
போலி முத்திரைத் தாள் மோசடியை முதலில் கண்டுபிடித்தது கர்நாடக போலீசார் தான். ஆனால்,தமிழகத்தில் சிபிசிஐடி டிஐஜியாக இருந்த முகம்மது அலியைப் போலவே அங்கும் தெல்கியைகாப்பாற்ற பல காவல் துறை அதிகாரிகள் முயற்சி செய்துள்ளனர்.
மேலும் தெல்கிக்கும் எஸ்.எம். கிருஷ்ணாவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் ரோஷன்பெய்க்குக்கும் தொடர்பு இருந்ததால், இந்த வழக்கை அப்போதைய அரசு சரியாகவிசாரிக்கவில்லை.
தேசிய அளவில் பிரச்சனையான பின்னரே தெல்கி கும்பலை கர்நாடக போலீஸ் கைது செய்தது.
இந் நிலையில் தமிழகத்தில் கடந்த வாரம் ரெய்டு நடத்தி முகம்மது அலி உள்ளிட்ட 3 பேரைக் கைதுசெய்த சிபிஐ மூன்று தினங்களுக்கு முன் கர்நாடகத்திலும் மூத்த போலீஸ் அதிகாரிகளின் வீடுகளின்ரெய்டு நடத்தியது.
இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற பெங்களூர் உதவி போலீஸ் கமிஷ்னர் சங்கராம் சிங், இன்ஸ்பெக்டர்வாலி பாஷா, சப்-இன்ஸ்பெக்டர் வி.ஏ.கான் ஆகியோரைக் கைது செய்தது.
திடுக்கிடும் வாக்குமூலம்:
இந்த மூவரும் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது சங்கராம் சிங்நீதிபதியிடம் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
முத்திரைத் தாள் மோசடியில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க்கை இந்தவழக்கிலிருந்து காப்பாற்றுமாறு அன்றைய முதல்வர் கிருஷ்ணா, அமைச்சர்கள் மற்றும் இப்போதையமத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் என்னை கட்டாயப்படுத்தினர்.
அந்த நிர்பந்துக்கு நான் பணிந்தேன். ரோஷன் பெய்க்கை காப்பாற்றப் போய் நான் பலிகடாஆகிவிட்டேன்.
நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தியபோது, அவனுக்கு பணம் கொடுக்க அரசுமுடிவு செய்தது. இதற்காக பல வழிகளிலும் பணத்தை ரெடி செய்தனர்.
பல கோடி போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கை விசாரித்து வந்த என்னிடமும் பணம் திரட்டித்தருமாறு கூறினர். இதையடுத்து தெல்கியிடம் இருந்து ரூ. 20 கோடியை வாங்கினேன்.
அதை சென்னைக்குச் சென்று நடிகர் ரஜினியின் மேனேஜரிடம் தந்தேன்.
இவ்வாறு சங்கராம் சிங் கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications