திக்கித் திணறும் அலி: அடுத்தடுத்து சிக்கப் போகும் உயர் அதிகாரிகள்
-காதர் கான்
சென்னை:
போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைதாகியுள்ள சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலி, தெல்கிகும்பலிடம் கைப்பற்றி ரூ. 60 கோடி மதிப்புள்ள முத்திரைத் தாள்களை விற்று பணமாக்கிவிட்டதாகசிபிஐ கருதுகிறது.
இந்த வழக்கில் 4 நாட்கள் அவரை தனியே வைத்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் 212கேள்விகள் அடங்கிய பைலைக் கொடுத்தனர். அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு தெரியவில்லை,நினைவில்லை என்ற ரீதியில் தான் பதில் தந்துள்ளார் முகம்மது அலி.
ஆனால், இந்த வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் இருக்கும் சென்னையைச் சேர்ந்த நிஜாமுதீன்கொடுத்துள்ள வாக்குமூலத்தை வைத்து சிபிஐ கேள்விகள் கேட்டபோது வியர்த்துப் போய்விக்கித்துள்ளார் அலி.
போலி முத்திரைத் தாள்களை டெல்கியின் கூட்டாளியான நிஜாமுதீன் தமிழகத்தில் விற்பதாக கர்நாடகபோலீசார், சிபிசிஐடி ஐடி அலியிடம் தகவல் தர, அதை வைத்து நிஜாமுதீனை மடக்கினார் அலி.
ஆனால், நிஜாமுதீனை உடனே ஜாமீனில் விட்டுவிட்ட அலி, அவரை பொன் முட்டையிடம் வாத்தாகமாற்றினார். தனக்கு வேண்டும்போதெல்லாம் நிஜாமுதீனிடம் பணம் வாங்கியுள்ளார் அலி. இதனால்நிஜாமுதீனும் தடையில்லாமல் போலி முத்திரைத் தாள்களை தமிழகத்தில் விற்று வந்துள்ளார்.
சிபிஐயின் 212 கேள்வி பைல்:
இந் நிலையில் தமிழக போலீசை நம்பிப் பயனில்லை என்று நினைத்த கர்நாடக போலீசார் தாங்களேசென்னைக்கு வந்து நிஜாமுதீனை கைது செய்து கொண்டு சென்றனர். அப்போது அவரிடம் இருந்துரூ. 150 கோடி மதிப்புள்ள போலி முத்திரைத் தாள்களைப் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரில் வைத்து வாக்குமூலம் தந்த நிஜாமுதீன் தன்னிடம் இருந்த ரூ. 60 கோடி போலிமுத்திரைத் தாள்களை அலி கைப்பற்றியதாகக் கூறியுள்ளார்.
தங்களது கஸ்டடியில் அலியை எடுத்த சிபிஐ அவரிடம் கொடுத்த 200 கேள்விகள் அடங்கியபைலில் முதல் கேள்வியாக இருந்தது, நிஜாமுதீனிடம் நீங்கள் கைப்பற்றிய ரூ. 60 கோடி மதிப்புள்ளபோலி முத்திரைத் தாள்கள் எங்கே? என்பது தான்.
இந்தக் கேள்வியைப் படித்ததுமே தலைசுற்றுவதாகவும், தண்ணீ வேணும், டீ வேணும் என்றும்அரற்றியிருக்கிறார் முகம்மது அலி.
அலி இப்படி பொறி கலங்கிப் போனதற்குக் காரணம், இந்த ரூ. 60 கோடி மதிப்புள்ள போலிமுத்திரைத் தாள்களையும் விற்றுப் பணமாக்கி, அவற்றை சொத்துக்களாக மாற்றிவிட்டார் அலிஎன்பது தான் என்கிறது சிபிஐ.
குவித்த சொத்துக்கள்:
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தன் பெயர், மகன்கள் பெயர், உறவினர்கள் பெயர்களில்ஏகத்துக்கும் சொத்துக்களை வாங்கியுள்ளார் அலி என்று சொல்லும் சிபிஐ அந்த ஆதாரங்களையும்தூக்கிப் போட்டு அலியை கலங்கடித்திருக்கிறது.
இதைத் தவிர இந்த விவகாரத்தில் அலியின் தொடர்புகள் வெளியில் வரக் காரணமாக இருந்தசிபிசிஐடியின் எஸ்.பி. சந்தீப்ராய் ரத்தோரிடமும் நேற்று சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
நிஜாமுதீன் என்ற போலி முத்திரைத் தாள் கும்பலின் முக்கியத் தலைவனைக் காப்பாற்ற அலிமுயற்சிப்பதாகவும் தனது உயர் அதிகாரிக்கு ரத்தோர் எழுதிய கடிதம் தான் இந்த வழக்கில் முக்கியத்திருப்பத்தை ஏற்படுத்தியது.
போலி முத்திரைத் தாள் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் பொது நலவழக்குப் போட்ட சுப்பிரமணியன் பாலாஜி என்ற வழக்கறிஞர், இந்தத் கடிதத்தை ஆதாரமாகநீதிமன்றத்தில் காட்டியபோது தமிழக அரசின் வழக்கறிஞர் அதிர்ந்தார்.
சிக்கும் உயர் அதிகாரிகள்:
வழக்கை நாங்களே விசாரிப்போம் என்று நீதிமன்றத்திடம் முதல் நாள் தமிழக அரசு, இந்தக்கடிதத்தை வழக்கறிஞர் பாலாஜி சமர்ப்பித்த உடன், நிலைமை கைவிட்டுப் போய்விட்டதை உணர்ந்துசிபிஐ விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இந் நிலையில் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் இன்னொரு எஸ்.பியான ஆவுடையப்பன் ஆகியோரிடம்சிபிஐஅதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
நஜாமுதீன் வழக்கில் தன்னை சுதந்திரமாக விசாரிக்க முகம்மது அலி அனுமதிக்கவில்லை என்று கூறி கூடுதல் டிஜிபிபாலச்சந்திரன், ஐஜி அமீத் வர்மா ஆகியோருக்கு தான் எழுதிய கடிதம் குறித்து சிபிஐயிடம் சந்தீப் ராய் ரத்தோர்விளக்கினார்.
அதன்பிறகும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார் ரத்தோர்.
அலியின் மீது பாலச்சந்திரனும், அமித் வர்மாவும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோணத்தில் சிபிஐஇப்போது விசாரிக்கிறது. இவர்களுக்கு நிஜாமூதினிடம் அலி பணம் வாங்கித் தந்திருக்கலாம் என சிபிஐ கருதுகிறது.
இதனால் இந்த மிக மூத்த அதிகாரிகளையும் சிபிஐ விசாரிக்கவும் கைது செய்யவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
அதே போல இந்த விவகாரத்தில் அலியைக் காப்பாற்ற முன்னாள் உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதாவும்முயன்றதாக சிபிஐ கருதுகிறது. இதனால் அவரிடமும் விசாரணை நடக்கலாம்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications