வழக்கறிஞர் சங்க தலைவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு
சென்னை:
திருச்சி வழக்கறிஞர்களைத் தாக்கியதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்சங்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் சங்க நிர்வாகிகள் 50 மீது உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் முதல் தகவல்அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அதிகார வரம்பின் கீழ் தங்களது மாவட்டத்தையும் சேர்க்க வேண்டும் என்றுதலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியிடம் கோரிக்கை விடுப்பதற்காக திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கநிர்வாகிகள் சென்னைக்கு வந்திருந்தனர்.
சுபாஷன் ரெட்டியின் அறை முன்பு அவர்கள் காத்திருந்தபோது, பிரபாகரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் அங்குவந்து திருச்சி வழக்கறிஞர்களைத் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சுபாஷன் ரெட்டிக்குதிருச்சி வழக்கறிஞர்கள் புகார் அனுப்பினர்.
அந்த புகார் மனுவை ஏற்று அதை வழக்காக பதிவு செய்தார் ரெட்டி. தற்போது இந்த வழக்கில் உயர்நீதிமன்ற காவல்நிலையம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பிரபாகரன், மாதவரம் செந்தில், பாண்டிச்சேரி அப்துல் அமீது,கும்மிடிப்பூண்டி லிங்கேஸ்வரன், தமிழரசன் மற்றும் 50 வழக்கறிஞர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில், திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் லட்சுமணன், செயலாளர் இளமுருகு,உறுப்பினர் சந்திரமெளலி, முன்னாள் தலைவர் முத்துக்கிருஷ்ணன், உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் நீதிபதிதினகர் அறை முன்பு நின்று கொண்டிருந்தனர்.
அப்போது மேற்சொன்ன உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் திருச்சி நிர்வாகிகளை மிகவும்கொடூரமாகத் தாக்கினர். அவர்களில் சிலர் லட்சுமணனின் கவுனை வலுக்கட்டாயமாக இழுத்துக் கிழித்தனர்.அவர்கள் கையில் வைத்திருந்த தீர்மானம் கிழித்து எறியப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
மாநில டிஜிபியின் பரிந்துரையின் பேரில், உயர்நீதிமன்ற உதவி ஆணையர் உத்தரவின் பேரில் முதல் தகவல்அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற காவல் நிலைய ஆய்வாளர் துரைராஜ் தெரிவித்தார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications