முத்திரைத்தாள் மோசடியில் கருவூல அதிகாரிகள் !
சென்னை:
போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் தமிழக அரசு கருவூல (treasury) அதிகாரிகளுக்குத் தொடர்பிருப்பதாகசந்தேகிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் டிஐஜி முகமதுஅலி, டி.எஸ். பி. சங்கர், எல்.ஐ.சி.அதிகாரி ராமசாமி சாமி ஆகியோரை அடுத்துசிவகாசி அச்சக அதிபர் மகபூப் ஜான் கைது செய்யப்பட்டார். அவரை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் வைத்துசி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இப்போது இந்த வழக்கில் தமிழக அரசின் கருவூலத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற தகவல்கிடைத்துள்ளது. முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் அரசாங்க கருவூலங்களில் முத்திரைத்தாள் வாங்குவதுவழக்கம்.
ஆனால் கருவூலக அதிகாரிகள் சிலர் கருவூலங்களில் முத்திரைத் தாள்களுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி(இங்கு இருப்பு இல்லை என்று சொல்லி), வெளியில் சிலரது பெயரை சொல்லி அவர்களிடம் வாங்கிக் கொள்ளச்சொன்னதாக தற்போது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகளைத் தொடர்ந்து கருவூலத்துறை அதிகாரிகளுக்கும் சிபிஐ வலைவிரித்துள்ளது.
இதற்கிடையே சிவகாசியில் உள்ள அச்சகங்களில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த வியாபார பரிவர்த்தனைகள்குறித்து தகவல் சேகரிக்குமாறு அந் நகர போலீசாருக்கு உத்தரவிட்டிருப்பதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் விசாரணை:
இந் நிலையில், இந்த மோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பேக்கிடம் சி.பி.ஐ. மீண்டும்விசாரணை நடத்தியுள்ளது.
முன்னாள் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ரோஷன் பேக். முத்திரைத்தாள்மோசடி விவகாரத்தில் குற்றச்சாட்டு எழுந்ததால் பதவி விலகினார். அவரது தம்பி ரேகன் பேக் இந்த வழக்கில்ஏற்கனவே கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications