திமுக அறக்கட்டளைக்கு "கவிதை மழை" வசூல்
சென்னை:
தாய் காவியம், கவிதை மழை ஆகிய நூல்கள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் ரூ. 4 லட்சம்தொகை திமுக அறக்கட்டளைக்கு அளிக்கப்படுவதாக அக் கட்சியின் தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
கருணாநிதி எழுதிய கவிதை மழை, தாய் காவியம் ஆகிய நூல்கள் சென்னையில்வெளியிடப்பட்டன. வெளியீட்டு நிகழ்ச்சி நடந்த அண்ணா அறிவாலயத்தில் இந்தப் புத்தகங்கள்விற்பனை செய்யப்பட்டன.
ஒரே நாளில் பிரமாண்டமான விற்பனை நடந்துள்ளதாகவும், போட்டி போட்டுக் கொண்டு அதிகவிலை கொடுத்து இந்த நூல்களை திமுகவினரும், பிறரும் வாங்கியுள்ளதாகக் கூறியள்ள கருணாநிதி,
இந்த விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் ரூ. 4 லட்சத்தை திமுக அறக்கட்டளைக்குவழங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இத் தொகை நலிவடைந்த திமுகவினருக்கு கல்வி வசதி, மருத்துவ வசதி அளிக்க பயன்படுத்தப்படும்எனன்கிறது அக் கட்சிய
கடந்த ஆண்டு தொல்காப்பியப் பூங்கா நூல் விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் ரூ. 37 லட்சத்தைதிமுக அறக்கட்டளைக்கு கருணாநிதி வழங்கினார்.












Click it and Unblock the Notifications