இலங்கை உள்ளாட்சி தேர்தலில் சந்திரிகா வெற்றி
கொழும்பு:
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணி பலத்த வெற்றி பெற்றது.
15 மாவட்டங்கள் அடங்கிய 6 மாகாணங்களில் 316 கவுன்சிலர்களைத் தேர்ந்து எடுக்க உள்ளாட்சித் தேர்தல்நடந்தது. இந்தத் தேர்தலில் 4,134 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 96 லட்சம் வாக்காளர்கள் தேர்தலில்ஓட்டளிக்க தகுதி பெற்று இருந்தும், கொழும்பு நகரில் நடந்த குண்டு வெடிப்பு காரணமாக, மிகக் குறைவானவாக்குகளே பதிவாகின. அதிபர் சந்திரிகாவும் ஓட்டு போடவில்லை.
ஓட்டு எண்ணிக்கையில் 5 மாகாணங்களில் அதிக இடங்களைப் பெற்று மக்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
புலிகள் எச்சரிக்கை:
இதற்கிடையே கிழக்கு மாகாணத்தில் அமைதி ஏற்படுத்தாவிட்டால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய் வோம்என்று விடுதலைப் புலிகள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் ஒரு பத்திரிக்கைக்கு அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது:-
மட்டகளப்பு மாவட்டத்தில் எங்கள் இயக்கத்தினர் மீது கருணா படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதைஇலங்கை ராணுவம் அதைக் கண்டுகொள்வது இல்லை.
இந்தப் பகுதியில் அமைதி ஏற்பட இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டு இருப்பதால் முதல் கட்டமாக எச்சரிக்கை விடுகிறோம்.தொடர்ந்து நாங்கள் பொறுமை காக்க முடியாது. இலங்கை அரசு கிழக்கு பகுதியில் அமைதி ஏற்படுத்தாவிட்டால்,நாங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவோம்.
அமைதி, சமாதானம், போர்நிறுத்தம் என்ற பெயரால் எங்கள் இயக்கத்தினரின் உயிரை பறிப்பதைபார்த்துக்கொண்டி ருக்க முடியாது. இலங்கை ராணுவம் கருணாவை கருவியாக பயன்படுத்தி வரு கிறது. எங்கள்பொறுமைக்கும் எல்லை உண்டு.
நார்வே தூதுக்குழுவிடமும் இதுபற்றி எடுத்துக்கூறி இருக்கிறோம். அவர்கள் இலங்கை அரசுடன் பேசி உடனடிநடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், போர் நிறுத்தம் கேள்விக்குறியாகி விடும் என்றார் தமிழ்ச்செல்வன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications