சுப. இளவரசனின் கூட்டாளி வீட்டில் வெடிகுண்டுகள்
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் கேம்ப் பகுதியில் தமிழர் விடுதலைப் படை தலைவர் சுப. இளவரசனின்கூட்டாளிகளின் வீட்டிலிருந்து பைப் வெடிகுண்டுகளை கைப்பற்றியதாக போலீஸார் கூறுகின்றனர்.
இளவரசன் விஷயத்தில் போலீசாரின் செயல்கள் கண்ணாமூச்சித்தனமாக உள்ளன. அவரை காட்டுப்பகுதியில் வீரப்பனை சந்திக்கப் போகும்போது பிடித்தாக போலீசார் கூறினாலும், அவராகவே பலமாதங்களுக்கு முன்பே சரணைந்துவிட்டதாக தகவல்கள் வந்தன.
பொடாவில் கைது செய்யப்பட்ட அவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில், மேட்டூர் கேம்ப் பகுதியில் ஒரு வீட்டில் குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகதகவல் வந்ததையடுத்து போலீஸார் அங்கு சென்றனர்.
ஆனால், வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்றத்தை அணுகிய போலீஸார் பூட்டைஉடைத்து சோதனை நடத்த அனுமதி பெற்று உள்ளே சென்று சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் 5 பைப் வெடிகுண்டுகள் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
இந்த வெடிகுண்டுகளும், சமீபத்தில் சுப. இளவரசன் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்துகைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டுகளும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் போலீசார்கூறுகின்றனர்.
இந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் இளவரசனின் கூட்டாளியாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாகபோலீஸார் கூறியுள்ளனர்.
வீரப்பன் பதுங்கியுள்ள காட்டுப் பகுதிக்கு அருகே பூட்டிய வீட்டில் வெடிகுண்டுகள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications