கர்நாடகம்: காவிரியில் மேலும் 2 அணைகள்!
பெங்களூர்:
தேசிய நீர் மின் உற்பத்தி நிறுவனத்தின் உதவியுடன் காவிரியாற்றின் குறுக்கே மேலும் இருஅணைகளைக் கட்ட கர்நாடகம் திட்டமிட்டுள்ளது.
மைசூர் மாவட்டத்தில் உள்ள சிவசமுத்திரத்திலும், மேக தாதுவிலும் மின்சாரம் தயாரிக்கும்,வகையில் இந்த அணைகளைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்துக்குச் செல்லும் காவிரி நீரை ஏற்கனவே பல அணைகளைக் கட்டி தடுத்து வரும்கர்நாடகம், இந்த இரு அணைகளையும் கட்டினால், தமிழகத்தின் நிலைமை மிக மோசமாகிவிடும்.
இதனால் இந்தத் திட்டங்களுக்கு தமிழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
மத்திய அரசின் தேசிய நீர் மின் உற்பத்தி நிறுவனம் தான் இந்த அணைகளைக் கட்டத்திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை கர்நாடகம், தமிழகம், கேரளம்,பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆனால், இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் (சுமார் 270 மெகாவாட்) தங்களுக்கேவழங்க வேண்டும் என கர்நாடகம் கோரி வருகிறது.
மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் ஒகேனக்கல்லில் ஒரு அணை கட்டவும் தேசிய நீர் மின் உற்பத்திநிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த அணையில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 50 சதவீதத்தையும் தங்களுக்குத் தர வேண்டும் எனகர்நாடகம் புதுக் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் கர்நாடக மின்துறை அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் தேவே கெளடாவின்மகனுமான ரேவண்ணா இன்று பெங்களூரில் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த அணைத் திட்டத்தை விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகதமிழகம்-கர்நாடகம் இடையே ஒப்பந்தத்தை உருவாக்க தேசிய நீர் மின் உற்பத்தி நிறுவனம் முயற்சிமேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஏற்படுவதிலும், அணைகள் கட்டுவதிலும் பிரச்சனைகள் வராது என்றேகருதுகிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications