ஈராக்கிலிருந்து பிலிப்பைன்ஸ் படைகள் வாபஸ்
மணிலா:
பிலிப்பைன்ஸ் லாரி டிரைவரை இராக்கில் தீவிரவாதிகள் கடத்தி வைத்துக் கொண்டு, அவரை கொல்லப் போவதாகமிரட்டுவதையடுத்து அந் நாட்டிலிருந்து தனது படைகளை வாபஸ் பெறுவதாக பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் உடனே தனது படைகளை வாபஸ் பெறாவிட்டால் ஏன்ஜெலோடிலே கிரஸ் என்ற அந்த டிரைவரைதலையை வெட்டிக் கொல்வோம் என தீவிரவாதிகள் மிரட்டியுள்ளனர்.
இதனால் திட்டமிட்டதற்கு ஒரு வார காலத்துக்கு முன்னதாகவே தனது படைகளை பிலிப்பைன்ஸ் வாபஸ் பெறஆரம்பித்துள்ளது.
இது தொடர்பாக அந் நாட்டு வெளியுறவுத் துறை செயலாளர் டெலியா ஆல்பர்ட் வெளிட்டுள்ள அறிக்கையில்,
ஈராக்கில் இருக்கும் 51 வீரர்களில் 8 பேர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். மீதமுள்ளவர்களும் விரைவில்வெளியேறிவிடுவார்கள் என்று கூறியுள்ளார். ஜூலை 20ம் தேதி ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பப்பெறுவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் குலோரியா அரோயா ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பல்கேரியா டிரைவர் தலை துண்டிப்பு:
இதற்கிடையே பல்கேரியா வாகன ஓட்டுநர் ஒருவரை இராக் தீவிரவாதிகள் தலையைத் துண்டித்து கொலைசெய்ததை பல்கேரியா அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று இவாலியோ கேபவ் மற்றும் ஜியார்ஜி லாசவ் என்ற இரண்டு ஓட்டுநர்களைதீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
அமெரிக்கத் துருப்புகள் பிடித்து வைத்திருக்கும் ஈராக் படை வீரர்கள் இன்னும் 24 மணிநேரத்தில் விடுதலைசெய்யப்பட வேண்டும். இல்லையென்றால் இரண்டு பல்கேரியர்களும் கொல்லப்படுவார்கள் என்று தீவிரவாதிகள்மிரட்டல் விடுத்திருந்தனர்.
இந் நிலையில் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு ஒரு வீடியோ கேசட் வந்துள்ளது. அதில் லாசவின் தலையைதுண்டிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
ஈராக் படையினர் விடுதலை செய்யப்படாவிட்டால் 24 மணி நேரத்திற்குள் மற்றொரு பிணைக்கைதியும்கொல்லப்படுவார் என்று அந்தக் கேசட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications