நெல்லுக்கு பதில் கிழங்கு பயிரிட ஜெயலலிதா அறிவுரை
சென்னை:
அதிக வருவாய் கிடைக்க விவசாயிகள் சர்க்கரை கிழங்கை பயிர் செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதாதெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்காத நிலையில், நெல் பயிரிட முடியாமல் காவிரி டெல்டா பாசனவிவசாயிகள் விக்கித்துப் போயுள்ளனர். இந் நிலையில் நெல்லை விட்டுவிட்டு, குறைந்த அளவு நீர் தேவைப்படும்மாற்றுப் பயிர்களை பயிரிடுமாறு ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மாற்றுப் பயிர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட காட்டாமணக்கு, சர்க்கரைச்சோளம் பயிரிடும் சிறப்புத் திட்டத்தில் தற்போது சர்க்கரைக் கிழங்கும் சேர்க்கப்பட்டுள்ளது.
கரும்பை விட அதிக சர்க்கரைச் சத்து இருக்கும் இந்தப் பயிரை கரும்புக்கு மாற்றாக பயிரிடலாம். இதை ஆண்டுக்குஇரண்டு முறை சாகுபடி செய்ய முடியும். மகசூலும் ஏக்கருக்கு 25 முதல் 30 டன் வரை இருக்கும். மேலும் ஏக்கருக்குரூ. 12,000 வீதம் ஆண்டுக்கு ரூ. 24,000 வருமானம் விவசாயிக்குக் கிடைக்கும்.
கரும்புக்குத் தேவைப்படும் தண்ணீரை விட 40 சதவீதம் குறைவான தண்ணீரே இதற்குப் போதும். உவர் மண்,களிமண் உள்ளிட்ட அனைத்து விதமான மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது.
பூச்சித் தாக்குதலை சமாளித்து வளரக்கூடியது. மேலும் இப்பயிரின் இலைகளை கால்நடைகளுக்குத் தீவனமாகவும்பயன்படுத்தலாம்.
இந்தப் பயிரைப் பயிரிடுவதன் மூலம் சர்க்கரை ஆலைகள் ஆண்டு முழுவதும் செயல்படும் வாய்ப்பு ஏற்படும்.இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தரும்.
சர்க்கரைக் கிழங்கு மற்றும் சர்க்கரை சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கு 8 சதவீத விற்பனை வரிவிதிக்கப்படும். அதேபோல காட்டாமணக்கிலிருந்து தயாரிக்கப்படும் பயோ டீசலுக்கு விற்பனை வரி 4 சதவீதமாகஇருக்கும்.
முதன்மைத் தொழில்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் இத்தொழில் சார்ந்த நிறுவனங்களுக்குத்தரப்படும்.
தவிர இத்தொழிலில் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு இறக்குமதி வரிவிலக்கு அளிப்பது குறித்தும்,அதேபோல காட்டாமணக்கிலிருந்து தயாரிக்கப்படும் பயோ டீசலுக்கு வரி விலக்கு வழங்குவது குறித்தும் மத்தியஅரசுடன் ஆலோசனை நடத்தி சலுகைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார் ஜெயலலிதா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications