கோத்ரா மறு விசாரணை: நாடாளுமன்றத்தில் அமளி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்து மீண்டும் ரயில்வேத்துறையில் சார்பில் விசாரணை நடத்தப்படும் என்றுரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் எதிர்க்கட்சிகள் கூச்சல் எழுப்பின. இதையடுத்த அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ்எரிக்கப்பட்டதில் அயோத்தியிலிருந்து வந்து கொண்டிருந்த 59 கர சேவகர்கள் இறந்தனர். இதையடுத்து நடந்தமதக் கலவரங்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இந்த ரயில் எரிப்பு தொடர்பாக அப்போதைய மத்திய பா.ஜ.க. அரசும், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலானமாநில பா.ஜ.க. அரசும் பல உண்மைகள் மூடி மறைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள லாலு, ரயில் எரிப்புதொடர்பாக ரயில்வே போலீஸாரின் விசாரணையை புதிதாகத் தொடங்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது நாாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றுஎதிரொலித்தது. அவை தொடங்கியதும் பாஜக தலைவர்களில் ஒருவரான் மல்ஹோத்ரா இதுதொடர்பாக லல்லுபிரசாத் யாதவைக் கண்டித்தும் அவரை பதவி விலகக் கோரியும் கோஷம் எழுப்பினார்.

அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் கோஷம் எழுப்பினர். பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ்கூட்டணிக் கட்சிகள் கோஷமிட்டன. அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மேற்கொண்டமுயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதையடுத்து மதியம் வரை அவையை ஒத்திவைப்பதாக சாட்டர்ஜி அறிவித்தார். இதேபோன்ற கூச்சல், குழப்பம்மாநிலங்களவையிலும் நிலவியதால் அந்த அவையும் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

இது தொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இச் சம்பவம் நடந்தபோது அமைதியாக இருந்த லாலு பிரசாத் யாதவ் இப்போது இதில் ஆர்வம் காட்டுவது,பீகாரில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்துதான்.

பீகாரில் சட்டம் ஓழுங்கு சீர் கெட்டு இருப்பதையும், காட்டாட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதையும் அறிந்தமக்களை திசை திருப்பவதற்காகவே இத்தகைய நடவடிக்கையை லல்லு பிரசாத் மேற்கொண்டிருக்கிறார்.

இது மிகத் தீவிரமான பிரச்சினையாகும். பிரதமர் மன்மோகன் சிங் இதில் தலையிட்டு நாட்டின் மத நல்லிணக்கம்இதன் மூலம் சீர் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இதற்கிடையே குஜராத் டிஜிபி பர்கவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், லல்லுவின் இந்த உத்தரவு குஜராத்போலீஸ் மேற்கொண்டு வரும் விசாரணையை பாதிக்காது. நாங்கள் எங்களது விசாரணையைத் தொடர்வோம்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+