எனக்கு கருணாநிதி தடை விதிக்கவில்லை: சரத்குமார்
சென்னை:
திமுக தொண்டர்கள் எனது ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி தடை எதையும்விதிக்கவில்லை என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
சரத்குமார் தனது 50வது பிறந்த நாளை சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் கொண்டாடினார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவினர் வேறு நடிகர்களின் ரசிகர்களாக இருக்கக் கூடாது என்று திமுகதலைமை உத்தரவிட்டுள்ளது.
கட்சி வேலையில் இருக்கும்போது ரசிகர் மன்ற வேலையையும் பார்ப்பது சரியாக இருக்காது என்ற கருத்தில்தான்இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எனது ரசிகர்களுக்கு இதுபோன்ற தடையை திமுக தலைமைவிதிக்கவில்லை.
எனக்கும், ராதிகாவுக்கும் பிறந்துள்ள குழந்தையை ஆசிர்வதிக்க தலைவர் கருணாநிதி வியாழக்கிழமை எனதுவீட்டுக்கு வரவுள்ளார்.
எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கம் ரசிகர்களுக்கு எனது நன்றிகள். தொடர்ந்து ஏய், சத்ரபதி,அய்யா ஆகிய படங்கள் வரவுள்ளன.
நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கலாம், அரசியல் குறித்து விமர்சிக்கலாம், கருத்துக் கூறலாம். அதில் தவறில்லை. ஆனால்அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் அரசியலில் வெற்றி பெற முடியும்.
ஜாதி மத பேதமற்ற சமுதாயம் உருவாக வேண்டும், தமிழ்ச் சமுதாயம் ஒற்றுமையாக செயல்பட்டு முன்னேறவேண்டும், தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ வேண்டும் என்பதே என்னுடைய பிறந்த நாள் செய்தியாகும்.
2006ல் நடக்கும் சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் கருணாநிதி முதல்வர் பதவிக்கு வருவார்என்றார் அவர்.












Click it and Unblock the Notifications