தாய்லாந்தில் சோனியா காந்தி
Subscribe to Oneindia Tamil
பாங்காக்:
பாங்காக்கில் நடக்கும் எய்ட்ஸ் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஇன்று அரசு முறைப் பயணமாக தாய்லாந்து சென்றார்.
மத்தியில் ஆளும் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் சோனியா காந்தி,அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
நாளை மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ள சோனியா, தாய்லாந்து பிரதமர் தக்ஷின்சினவாத்ரா, வெளியுறவு அமைச்சர் சுரகியத், தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன்மண்டேலா ஆகியோரையும் சந்திக்கிறார்.
எய்ஸ்ட் கட்டுப்பாட்டில் அதிக ஆர்வம் காட்டி வரும் சோனியா, கடந்த 2001ம் ஆணடு ஐக்கியநாடுகள் சபையிலும் இந்த நோய் கட்டுப்பாடு குறித்து உரையாற்றியது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications