ஜூலை 25ல் பெங்களூரில் தமிழர் பேரமைப்பு மாநாடு
பெங்களூர்:
பெங்களூரில் வரும் 25ம் தேதி உலகத் தமிழர் பேரவை அமைப்பின் 2ம் ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரவை அமைப்பின் தலைவர்பழ.நெடுமாறன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
வரும் 25ம் தேதி காலை 9 மணிக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் சுப்பிரமணியனின் வரவேற்புரையுடன் விழாதொடங்குகிறது. காசி ஆனந்தன் கொடியேற்றி வைக்கிறார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன்மாநாட்டில் துவக்க உரை நிகழ்த்துகிறார். பழ. நெடுமாறன் தலைமை உரை நிகழ்த்துகிறார்.
தமிழா நாம் பேசுவது தமிழா என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறுகிறது. கவிஞர்கள்அறிவுமதி,மரு.அ.தாயப்பன், ஜெயபாஸ்கரன், பச்சியப்பன் ஆகியோர் கவி பாடுகிறார்கள். பின்னர், தமிழ் வளர்ச்சிஅன்றும் இன்றும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறுகிறது. இதனையடுத்து பொருளாதாரத்தில் தமிழர்நிலை குறித்து கருத்தரங்கும், காசி ஆனந்தனுக்கு உலகப் பெருந்தமிழர் விருதும் வழங்கப்படுகிறது.
விழாவில் பழ.நெடுமாறனின் பழந்தமிழர் பரவிய நாடுகள் என்ற புத்தகம் உள்ளிட்ட நூல்கள்வெளியிடப்படுகின்றன. மாலையில் நடைபெறும் கருத்தரங்கில் வைகோ வாழ்த்துரை வழங்குகிறார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications