15 குழந்தைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடம்
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள27 மாணவ, மாணவிகளில் சுமார் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.
கருகி இறந்த குழந்தைகள் 1 முதல் 5ம் வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். இந்தத் தீயில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரையிலான அறைகள் முழுவதுமாக எரிந்து போய்விட்டன.
தங்கள் குழந்தைகள் எந்த மருத்துவமனையில் எந்த வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரியாமல்பெற்றோர்கள் ஒவ்வொரு மருத்துவமனையாக அழுதபடியே அங்கும் இங்கும் ஓடிக் கொண்டுள்ளர்.
முன்னதாக, விபத்து நடந்த வகுப்பறைகளில் தீ கொளுந்து விட்டு எரிந்ததால், கருகிய உடல்களை எடுக்கமுடியாமல் தீயணைப்புப் படையினர் தவித்தனர். இதனால் அவை மேலும் கருகி அடையாளம் தெரியாத அளவுக்குஉருக்குலைந்து போய் விட்டதாக தீயணைப்பு வீரர்கள் கூறினர்.
சம்பவம் நடந்த பள்ளியின் வெளியே குழந்தைகளின் பெற்றோர்கள் கண்ணீரும், கதறலுமாக முற்றுகையிட்டனர்.தீயின் கொடூரத்தையும் குழந்தைகளின் அலறலையும் கேட்ட பலர் மயங்கி விழுந்தனர்.
உடல் கருகிய குழந்தைகளின் ஓலம், எரிந்த உடல்களின் வாசனை என அப் பகுதியே கலங்கிப் போயுள்ளது.
சம்பவம் நடந்த கும்பகோணம் கிருஷ்ணா தொடக்கப் பள்ளிக்கு விரையும் முன்பாக நிருபர்களிடம் பேசியதஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன்,
தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. போதுமான தீயணைப்பு வண்டிகளும், ஆம்புலன்ஸுகளும் அங்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தீ விபத்திற்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிக்கப்படுகிறது. சயைமல் அறையில் இருந்து தீபரவியதாகவும் சொல்கிறார்கள். முழுமையான விசாரணைக்குப் பிறகே காரணம் உறுதிப்படுத்தப்படும்.
சாவு எண்ணிக்கை குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றார் ராதாகிருஷ்ணன்.
பின்னர் சம்பவ இடத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், இதுவரை 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 27 மாணவ,மாணவிகள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications