ஜெ. நேரில் ஆறுதல்: கருணாநிதி வேதனை
சென்னை:
பள்ளியில் ஏற்பட்ட தீயில் பலியான 80 குழந்தைகளின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 1 லட்சம் இழப்பீடுவழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து முதல்வர் ஜெயலலிதா கும்பகோணம் வந்தார். சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில்வந்த அவர் சம்பவம் நடந்த பள்ளியை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், அதிகாரிகளிடம் நடந்ததைக்கேட்டறிந்தார்.
இதையடுத்து இறந்த மாணவிகளின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனைக்குச் சென்று,மாணவிகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
சுமார் 45 நிமிடங்கள் அங்கிருந்த முதல்வர், காயமடைந்த மாணவிகளையும் பார்த்தார். மருத்துவர்களிடம்அவர்களது நிலை குறித்து கேட்டறிந்த பின் நிவாரண உதவிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தினார்.
முன்னதாக மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வனத்துறை அமைச்சர் வைத்தியலிங்கத்தை இன்று காலை ஜெயலலிதாகும்பகோணத்துக்கு அனுப்பினார்.
கருணாநிதி வேதனை:
சம்பவம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கும்பகோணத்தில் உள்ள தனியார்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கணக்கான மாணவிகள் கோரமாக பலியான செய்தி கேட்டு பெரும்வேதனை அடைந்தேன்.
இறந்தது தனியார் பள்ளி மாணவிகள் என்றாலும் கூட மாணவிகளின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு தரவும், தீவிபத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, இனிமேல் அப்படி நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் தமிழகஅரசு முன் வர வேண்டும்.
தஞ்சை மாவட்ட திமுக செயலாளரும், கும்பகோணம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுமான கோ.சி.மணி தலைமையில்திமுகவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து இன்று நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் செ.குப்புசாமி பேசியுள்ளார். இறந்தகுழந்தைகளின் குடும்பத்தினருக்கு திமுக அறக்கட்டளையின் சார்பில் நிவாரண உதவி வழங்கப்படும் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
விசாரணை நடத்த சிபிஎம் கோரிக்கை:
இந்த விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மார்க்சிட்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் வரதராஜன், சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், நிவாரண உதவிகள் உடனடியாகக்கிடைக்கச் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications