பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளிக் கூட தீவிபத்து தொடர்பாக பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேரை போலீஸார்கைது செய்துள்ளனர்.

இன்று காலை இத்தகவலை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீவிபத்து தொடர்பாக பள்ளித் தாளாளர் புலவர் பழனிச்சாமி,சரஸ்வதி மற்றும் சத்துணவுக் கூட ஊழியர்கள் 3 பேர் ஆகியோர் நேற்று இரவே கைது செய்யப்பட்டு விட்டனர்.அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

பலியான குழந்தைகளின் பெயர்கள்:

கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளில் 80 பேரின் பெயர் விவரம்:

2ம் வகுப்பு படித்து வந்த அபர்ணா (வயது 7),

3ம் வகுப்பு படித்து வந்த சத்யபிரியா, சக்திவேல், சுரேஷ், முத்துராமன் (இவர்கள் 7 வயதானவர்கள்),

பவித்ரா, ஹேமலதா, சுஸ்மிதா, நீலகண்டன், விஜய், அப்பு, மணிகண்டன், ப்ரவின்ராஜ், அரவிந்த், கனகபிரியா, சோனியா, விக்னேஷ்,பூபாலன், முருகானந்தம், வெங்கடேஷ், திவ்யா, துர்க்கா தேவி, பிரதீப், பிரேம் குமார்

ஜான் ஜெனிபர், நாகஜோதி, பிரியதர்ஷினி, யாலினி, ப்ரியா, லட்சுமி நாராயணன், லட்சுமணன், அட்சயா, சரண்டா, அருள் பாண்டி,விக்னேஷ், நியாஸ், சோலையம்மா, விஜய், பாலமகேஸ்வரி, வசந்த பிரியா, கார்த்திகா, பிரவீன் ராஜ்,

மோகன் குமார், ஜோதிலட்சுமி, வடிவேல், அருள் சூர்யா, ஆர்.ஜோதிலட்சுமி, சிவா. இவர்கள் அனைவரும் 8 வயதானவர்கள். சதீஷ்குமார் (வயது 9).

4ம் வகுப்பு படித்து வந்தவர்களான, தரணிகா, மாரிமுத்து, முத்துராஜா, பிரியதர்ஷினி, அரவிந்த், ஜெயப்பிரகாஷ், ஆனந்த்ராஜ்,கார்த்திகா

பவித்ரன், மணிகண்டன், செல்வகணேஷ், கார்த்தி, காயத்ரி, ப்ரவீன் குமார். மோகன் குமார், பிரியங்கா, வாசுதேவன், ஜெயலட்சுமி,ஸ்ரீதர், ரமணா. இவர்கள் அனைவரும் 9 வயதானவர்கள். ஷீபா (10 வயது)

5ம் வகுப்பு படித்து வந்த மாணவ, மாணவிகளான, ஜார்ஜ், தீபா, மஞ்சு, கீர்த்திவாசன், நந்தினி. இவர்கள் அனைவரும் 10வயதானவர்கள்.

6ம் வகுப்பு படித்து வந்த திவ்யா, கீர்த்தனா, புவனேஸ்வரி, துர்க்கா தேவி. இவர்கள் 11 வயதானவர்கள்.

7ம் வகுப்பு படித்து வந்த அனிதா (வயது 14).

அப்பல்லோ கொண்டு வரப்படும் குழந்தைகள்:

இதற்கிடையே தீக் காயமடைந்த இரு குழந்தைகளுக்கு ஸ்கின் கிராப்டிங் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள்கூறியுள்ளதால், அவர்களை உடனே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்குமாறு முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+